Mayaiyana Ulaginilae

மாயையான உலகினிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாயையான உலகினிலே
மாண்டு போகும் எங்களையும்
தேடியே யேசுவே வந்தவரே
தாயின் அன்பு ஒருநாள் மாறிவிடும்
தகப்பனின் அன்பு அதுவும் மாறிவிடும் -2
மாறாதவர் என் யேசுவே
என்றென்றுமே மாறாதவர் -2
கணவன் அன்பு ஒருநாள் மாறிவிடும்
மகனின் (மகளின்) அன்பு அதுவும் மாறிவிடும்
மாறாதவர் என் யேசுவே
என்றென்றுமே மாறாதவர் -2
உம்மைத்தானே நான் பற்றிக்கொன்டேன்
உம்மையே நான் நம்பியுள்ளேன் -2
நல்லவரே இயேசு வல்லவரே
என்றென்றைக்கும் நீர் போதுமே -2