matsimaiyil siranthavare

மாட்சிமையில் சிறந்தவரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாட்சிமையில் சிறந்தவரே
மானிடரை மீட்கவே
தம் மகிமையை இழந்தவராய்
மண்ணில் உதித்த மெய் தேவனே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
உம்மை போல் வேறு ராஜன் இல்லை
இயேசுவே ரட்சகரே
இயேசுவே மீட்பின் காரணரே
இயேசுவே ரட்சகரே
இயேசுவே உம்மையே உயர்த்திடுவோம்
பாவ பாரம் சுமந்திடும்
மாந்தரின் துயர் நீக்கவே
விண்ணை விட்டு மண்ணில் வந்த
விண்ணின் நாயகனே
முழங்கால்கள் யாவும் பணிந்திடும்
முகமுகமாய் உம்மை காண்கையில்
நாவு யாவும் அறிக்கை செய்யும்
இயேசுவே தேவன் என்று