Mathave Saranam

மாதாவே சரணம் உந்தன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே
கன்னி மாதாவே சரணம்
1.மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே
2.நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே
மாதாவே சரணம் உந்தன் பாடல் வரிகள், Maathaavae Saranam Unthan Lyrics