Mark-16
மாற்கு-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Mark-14 – மாற்கு-14
1. இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.
2. ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.
3. அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.
4. அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?
5. இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்.
6. இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
7. தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.
8. இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.
9. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10. அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான்.
11. அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்கு பணம்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.
12. பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
13. அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்.
14. அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ, அந்த வீட்டு எஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.
15. அவன் கம்பளம் முதலானவைகளை விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
16. அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
17. சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.
18. அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19. அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ, நானோ? என்று ஒவ்வொருவரும் அவரிடத்தில் கேட்கத்தொடங்கினார்கள்.
20. அவர் பிரதியுத்தரமாக: என்னுடனே கூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி;
21. மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
22. அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
23. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.
24. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
25. நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
26. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.
27. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
28. ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
29. அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான்.
30. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்கு முன்னே, நீ மூன்று தரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31. அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும், உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.
32. பின்பு கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
33. பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
34. அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
35. சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு:
36. அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.
37. பின்பு, அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா? ஒரு மணி நேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?
38. நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
39. அவர் மறுபடியும் போய், அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
40. அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.
41. அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
42. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.
43. உடனே, அவர் இப்படிப் பேசுகையில் பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
44. அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான்.
45. அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.
46. அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
47. அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
48. இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும், தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
49. நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்.
50. அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
51. ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.
52. அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களைவிட்டு ஓடிப்போனான்.
53. இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.
54. பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
55. அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை.
56. அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.
57. அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,
58. அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.
59. அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று.
60. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
61. அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
62. அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வ வல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.
63. பிரதான ஆசாரியன் இதைக்கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?
64. தேவதூஷணத்தைக் கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
65. அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
66. அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,
67. குளிர்காய்ந்து கொண்டிருக்கிற பேதுருவைக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள்.
68. அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று.
69. வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.
70. அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நின்றவர்கள் பேதுருவைப்பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.
71. அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.
72. உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதான்.
Mark-14 – marku-14
1. irantu nalaikkuppinpu pulippillatha appanysappitukira paskapantikai vanthathu. appozhuthu pirathana aasariyarum vethaparakarum, avaraith thanthiramayp pitiththuk kolaiseyyumpati vakaithetinarkal.
2. aakilum janangkalukkulle kalakam untakathapatikku, pantikaiyile appatis seyyalakathu enrarkal.
3. avar peththaniyavil kushtarookiyayiruntha seemoon veettile poojanapanthiyirukkaiyil, oru sthiree vilaiyerapperra nalatham ennum uththama thailamulla vellaikkalparaniyaik kontuvanthu, athai utaiththu, anthath thailaththai avar sirasinmel oorrinal.
4. appozhuthu silar thangkalukkulle visanamatainthu: inthath thailaththai ippati veenays selavazhippanen?
5. ithai munnooru panaththirku athikamana kirayaththukku virru thariththirarukkuk kotukkalame enru solli, avalaikkuriththu murumuruththarkal.
6. iyesu avarkalai nookki: avalai vittuvitungkal; en avalaith thontharavupatuththukireerkal? ennitaththil narkiriyaiyais seythirukkiral.
7. thariththirar eppoothum ungkalitaththil irukkirarkal. ungkalukku manathuntakumpoothellam neengkal avarkalukku nanmai seyyalam; nanoo eppoothum ungkalitaththil iren.
8. ival thannal iyanrathais seythal; nan atakkam pannuvatharku eththanamaka, en sareeraththil thailampoosa munthikkontal.
9. inthas suvisesham ulakaththil engkengke pirasangkikkappatumoo angkangke ivalai ninaippatharkaka ival seythathum sollappatum enru meyyakave ungkalukkus sollukiren enrar.
10. appozhuthu, panniruvaril oruvanakiya yoothaskariyooththu enpavan avaraip pirathana aasariyarukkuk kattikkotukkumpati avarkalitaththirkup poonan.
11. avarkal athaik kettu, santhooshappattu, avanukku panamkotuppoom enru vakkuththaththam panninarkal; avan avaraik kattikkotuppatharkuth thakuntha samayam parththukkontirunthan.
12. paskavaip paliyitum nalakiya pulippillatha appanysappitukira muthalam nalile, avarutaiya seesharkal avaritaththil vanthu: neer paskavaip pusippatharku nangkal engke pooy aayaththam pannas siththamayirukkireer enru kettarkal.
13. avar thammutaiya seesharil irantuperai nookki: neengkal nakaraththirkulle poongkal, angke thanneerkkutam sumanthuvarukira oru manushan ungkalukku ethirppatuvan, avan pinne poongkal.
14. avan entha veettirkul piravesikkiranoo, antha veettu ejamanai nookki: nan en seesharootukootap paskavaip pusikkiratharkuth thakuthiyana itam engkeyenru poothakar ketkirar enru sollungkal.
15. avan kampalam muthalanavaikalai viriththu aayaththampannappattirukkira vistharamana melveettaraiyai ungkalukkuk kanpippan; angke namakkaka aayaththampannungkal enru solli anuppinar.
16. appatiye, avarutaiya seeshar purappattu nakaraththil pooy, thangkalukku avar sonnapatiye kantu, paskavai aayaththampanninarkal.
17. sayangkalamanapoothu, avar panniruvarootungkoota avvitaththirku vanthar.
18. avarkal panthiyamarnthu poojanampannukaiyil, iyesu avarkalai nookki: ennutane pusikkira ungkalil oruvan ennaik kattikkotuppan enru meyyakave ungkalukkus sollukiren enrar.
19. appozhuthu avarkal thukkamatainthu: nanoo, nanoo? enru ovvoruvarum avaritaththil ketkaththotangkinarkal.
20. avar pirathiyuththaramaka: ennutane kootath thalaththil kaiyitukiravanakiya panniruvariloruvane avan enru solli;
21. manushakumaran thammaikkuriththu ezhuthiyirukkirapatiye pookirar; aakilum, entha manushanal manushakumaran kattikkotukkappatukiraroo, antha manushanukku aiyoo! antha manushan piravathirunthananal avanukku nalamayirukkum enrar.
22. avarkal poojanam pannukaiyil, iyesu appaththai etuththu aaseervathiththu, athaippittu, avarkalukkuk kotuththu: neengkal vangkip pusiyungkal, ithu ennutaiya sareeramayirukkirathu enrar.
23. pinpu, paththiraththaiyum etuththu sthooththirampanni, athai avarkalukkuk kotuththar. avarkal ellarum athile panampanninarkal.
24. appozhuthu avar avarkalai nookki: ithu anekarukkakas sinthappatukira puthu utanpatikkaikkuriya ennutaiya iraththamayirukkirathu.
25. nan thevanutaiya rajyaththil navamana rasaththaip panampannum nalvaraikkum thiratsappazharasaththai ini nan panampannuvathillaiyenru meyyakave ungkalukkus sollukiren enrar.
26. avarkal sthooththirappattaip patina pinpu, olivamalaikkup purappattup poonarkal.
27. appozhuthu iyesu avarkalai nookki: meyppanai vettuven, aatukal sitharatikkappatum enru ezhuthiyirukkirapati, intha iraththiriyile neengkal ellarum ennimiththam itaralataiveerkal.
28. aakilum nan uyirththezhuntha pinpu, ungkalukku munne kalileyavukkup pooven enrar.
29. atharkup pethuru: umathunimiththam ellarum itaralatainthalum, nan itaralataiyen enran.
30. iyesu avanai nookki: inraikku, intha iraththiriyile, seval irantutharam koovukiratharku munne, nee moonru tharam ennai maruthalippay enru meyyakave unakkus sollukiren enrar.
31. atharku avan: nan ummoote marikkaventiyathayirunthalum, ummai maruthalikkamatten enru uruthiyays sonnan; ellarum appatiye sonnarkal.
32. pinpu kethsamane ennappatta itaththirku vantharkal. appozhuthu avar thammutaiya seesharkalai nookki: nan jepampannumalavum ingke utkarnthirungkal enru solli;
33. pethuruvaiyum yakkoopaiyum yoovanaiyum thammoote koottikkontupooy, thikilataiyavum, mikavum viyakulappatavum thotangkinar.
34. appozhuthu, avar: en aaththuma maranaththukkethuvana thukkangkontirukkirathu. neengkal ingke thangki, vizhiththirungkal enru solli,
35. sarru appurampooy, tharaiyile vizhunthu, antha velai thammaivittu neengkippookakkootumanal athu neengkaventumenru ventikkontu:
36. appa pithave, ellam ummale kootum; inthap paththiraththai ennilirunthu etuththuppootum, aakilum en siththaththinpatiyalla, ummutaiya siththaththinpatiye aakakkatavathu enrar.
37. pinpu, avar vanthu, avarkal niththiraipannukirathaikkantu, pethuruvai nookki: seemoone, niththirai pannukiraya? oru mani neram nee vizhiththirukkakkootatha?
38. neengkal soothanaikkutpatathapatikku vizhiththirunthu jepampannungkal; aavi ursakamullathuthan, mamsamoo palaveenamullathu enrar.
39. avar marupatiyum pooy, antha varththaikalaiye solli jepampanninar.
40. avar thirumpa vanthapoothu, avarkal marupatiyum niththiraipannukirathaik kantar; avarkalutaiya kankal mikuntha niththiraimayakkam atainthirunthapatiyal, thangkal marumozhiyaka avarukkus solvathu innathenru ariyathiruntharkal.
41. avar moonrantharam vanthu: ini niththiraipanni ilaipparungkal; poothum, velai vanthathu, ithoo, manushakumaran pavikalutaiya kaikalil oppukkotukkappatukirar.
42. ennaik kattikkotukkiravan, ithoo, vanthuvittan, ezhunthirungkal poovoom enrar.
43. utane, avar ippatip pesukaiyil panniruvaril oruvanakiya yoothas vanthan; avanoote kootap pirathana aasariyarum vethaparakarum moopparum anuppina thiralana janangkal, pattayangkalaiyum, thatikalaiyum pitiththukkontu vantharkal.
44. avaraik kattikkotukkiravan: nan evanai muththanyseyvenoo avanthan, avanaip pitiththup paththiramayk kontupoongkal enru avarkalukkuk kurippus solliyirunthan.
45. avan vanthavutane, avarantaiyil sernthu: rapee, rapee, enru solli, avarai muththanyseythan.
46. appozhuthu avarkal avarmel kaipoottu, avaraip pitiththarkal.
47. appozhuthu kootaninravarkalil oruvan kaththiyai uruvi, pirathana aasariyanutaiya velaikkaranaik kathara vettinan.
48. iyesu avarkalai nookki: kallanaip pitikkap purappatukirathupoola, neengkal pattayangkalaiyum, thatikalaiyum etuththukkontu ennaip pitikkavantheerkal;
49. nan thinanthoorum ungkal natuvile thevalayaththil upathesam pannikkontirunthen; appozhuthu, neengkal ennaip pitikkavillaiye; aanalum vethavakkiyangkal niraiveraventiyathayirukkirathu enrar.
50. appozhuthu ellarum avaraivittu ootippoonarkal.
51. oru valipan oru thuppattiyai maththiram thanmel poorththukkontu avar pinne poonan; avanaip pitiththarkal.
52. avan than thuppattiyaip poottuvittu, nirvanamay avarkalaivittu ootippoonan.
53. iyesuvai avarkal pirathana aasariyanitaththil kontupoonarkal; angke aasariyar mooppar vethaparakar ellarum kootivanthiruntharkal.
54. pethuru thooraththile avarukkup pinsenru, pirathana aasariyanutaiya aramanaikkul vanthu, sevakarootekoota utkarnthu, neruppantaiyile kulirkaynthukontirunthan.
55. appozhuthu pirathana aasariyarum aaloosanais sangkaththaranaivarum iyesuvaik kolaiseyyumpati avarukku viroothamakas satsi thetinarkal; akappatavillai.
56. anekar avarukku viroothamakap poyssatsi solliyum, anthas satsikal ovvavillai.
57. appozhuthu silar ezhunthu, kaivelaiyakiya inthath thevalayaththai nan itiththuppoottu, kaivelaiyallatha veronrai moonru nalaikkulle kattuven enru ivan sonnathai nangkal kettoom enru,
58. avarukku viroothamayp poyssatsi sonnarkal.
59. appatis solliyum avarkal satsi ovvamarpooyirru.
60. appozhuthu pirathana aasariyan ezhunthu natuve ninru, iyesuvai nookki: ivarkal unakku viroothamays sollukirathaikkuriththu nee onrum sollukirathillaiya enru kettan.
61. avaroo oru uththaravum sollamal pesathirunthar. marupatiyum pirathana aasariyan avarai nookki: nee sthooththirikkappatta thevanutaiya kumaranakiya kiristhuthana? enru kettan.
62. atharku iyesu: nan avarthan; manushakumaran sarva vallavarin valathu parisaththil veerriruppathaiyum, vanaththin mekangkalmel varuvathaiyum neengkal kanpeerkal enrar.
63. pirathana aasariyan ithaikkettavutane, than vasthirangkalaik kizhiththukkontu: inis satsikal namakku ventiyathenna?
64. thevathooshanaththaik ketteerkale. ungkalukku ennamayth thoonrukirathu enran. atharku avarkalellarum: ivan maranaththukkup paththiranayirukkiran enru theermanampanninarkal.
65. appozhuthu silar avarmel thuppavum, avarutaiya mukaththai mootavum, avaraik kuttavum, nyanathirushtiyinale parththus sol enru sollavum thotangkinarkal; velaikkararum avaraik kannaththil araintharkal.
66. aththarunaththile pethuru keezhe aramanai murraththilirukkaiyil, pirathana aasariyanutaiya velaikkarikalil oruththi vanthu,
67. kulirkaynthu kontirukkira pethuruvaikkantu, avanai urrupparththu: neeyum nasareyanakiya iyesuvoote irunthay enral.
68. atharku avan: nan ariyen; nee sollukirathu enakkuth theriyathu enru maruthaliththu, veliye vasal mantapaththukkup poonan; appozhuthu seval koovirru.
69. velaikkari avanai marupatiyum kantu: ivan avarkalil oruvan enru aruke ninravarkalukkus sonnal.
70. avan marupatiyum maruthaliththan. sarruneraththukkuppinpu marupatiyum aruke ninravarkal pethuruvaipparththu: meyyakave nee avarkalil oruvan, nee kalileyan, un pessu atharku oththirukkirathu enrarkal.
71. atharku avan: neengkal sollukira manushanai ariyen enru solli, sapikkavum saththiyampannavum thotangkinan.
72. utane seval irantantharam koovirru. seval irantutharang koovukiratharkumunne nee ennai moonru tharam maruthalippay enru iyesu thanakkus sonna varththaiyaip pethuru ninaivu koornthu, mikavum azhuthan.