Marithor Uyirtheluvaar

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
வானெக்காளத் தொனி முழங்க.
அனுபல்லவி
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால். – மரித்தோர்
சரணங்கள்
1. தூதர் மின் னாற்றிசை துலங்க,
ஜோதி வான் பறை இடி முழங்க,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
பரிசுத் தோர் திரள் மனதிலங்க. – மரித்தோர்
2. வானம் புவியும் வையகமும்
மட மட வென்று நிலை பெயர,
ஆன பொருளெல்லாம் அகன் றோட,
அவரவர் தம் தம் வரிசையிலே. – மரித்தோர்
3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய். – மரித்தோர்
4.சமுத்திரம் தன்னில விழுந்தோரை,
தரை, தீ, தாமும் தின்றோரைச்
சமூலம் தந்தது க்ஷணப்பொழுதில்
சருவேசர் நடுத் தீர்வைக்கென்றே- மரித்தோர்