Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics

மார்கழி மாதத்து குளிரினிலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மார்கழி மாதத்து குளிரினிலே
மன்னவன் பிறந்துள்ளார்
மாடடை தொழுவின் நடுவினிலே
குழந்தையாய் தவழ்கின்றார்
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக
உலகில் நல்மனம் கொண்டோர்க்கு அமைதியும் ஆகுக
மார்கழி மாதத்து குளிரினிலே மன்னவன் பிறந்துள்ளார்
தாவீதின் ஊரினிலே
மழலையாய் மலர்ந்தாரே
அமைதியின் மன்னனாய்
அவனியில் உதித்தாரே
மனுவேலனாய் மண்ணிலே – 2
பாவ இருள் நீக்கிடவே
பிறந்தார் பிறந்தார் பாலன் பிறந்தார்
நம் பாவம் போக்க மீட்பர் பிறந்தார்
வானவரின் செய்தி கேட்டு
மேய்ப்பவர்கள் மகிழ்ந்தனரே
வானத்திலே வால்நட்சத்திரம்
அழகாய் தோன்றியதே – 2
ஞானியர் பயணத்திலே
நல்வழி காட்டியதே
நாமும் பாலணை கண்டிடுவோம்
வாழ்த்திசை பாடி மகிழ்ந்திடுவோம்