marathathu marathathu un anpu – Marathathu Marathathu un Anbu

மாறாதது மாறாதது உன் அன்பு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

மாறாதது மாறாதது உன் அன்பு – Marathathu Marathathu un Anbu
பாடல் வரிகள் – தியான பாடல்
மாறாதது மாறாதது உன் அன்பு மாறாதது
ஆ…. ஆ… ஆ…
மாறாதது மாறாதது உன் அன்பு மறையாதது – 2
மறையாதது மறையாதது உன் அருள் மறையாதது
நிறைவானது நிறைவானது உன் நினைவே நிறைவானது
என் வாழ்வெல்லாம் சுகமானது – 2
1. அன்னையின் கருவில் என்னை நீ தெரிந்தாய்
கண்ணின் மணிபோல் கருத்தாய் காத்து வந்தாய் – என் – (2)
என் பெயர் சொல்லி அழைத்து கொண்டாய்
உன் பணி செய்ய தெரிந்து கொண்டாய்
வாழ்வு முழுவதுமே அணைத்துக் கொண்டாய்
வானின் மழையெனவே வரம் பொழிந்தாய்
உன் அன்பு மாறாதது உன் அருள் மறையாதது
பா பா ம பாஸரி நி நிப நி ரிஸ
கமபநி பம கரி ஸநி ஸ
2. உன் வழி நடக்கையில் ஒளியாய் நீ இருந்தாய்
தடுமாறி விழாமல் கரத்தால் பிடித்துக் கொண்டாய் – 2
ஆயனாய் என்னை சுமந்து வந்தாய்
உன் ஆவியின் கரத்தால் ஆட்கொண்டாய்
வாழ்வு முழுவதுமே அணைத்துக் கொண்டாய்
வானின் மழையெனவே வரம் பொழிந்தாய்
உன் அன்பு மாறாதது உன் அருள் மறையாதது