Manradum Aviyanavar Lyrics

மன்றாடும் ஆவியானவர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மன்றாடும் ஆவியானவர்
எனக்காக பரிந்து பேசும் மத்தியஸ்தர்
பிதாவின் சமூகத்தில் எப்போதும் இருப்பதை
வாஞ்சித்து மகிழ்கின்றேன் அவரையே துதிக்கின்றேன்
பரிசுத்தரே, படைத்தவரே உம்மை துதிக்கின்றேன்
மீட்பரே, எங்கள் மேய்ப்பரே உம்மை போற்றுகிறேன் -2
அவர் சொல்ல ஆகும் அவர் சொற்படி நடக்கும்
அவர் வார்த்தை எனக்குள் இருப்பதினால்
நான் சொல்ல ஆகும் நிச்சயமாய் ஆகும்-2
ராஜாவின் ஜெயகம்பீரம் எனக்குள் இருக்கின்றதே
நீதிமானின் கூடாரத்தில்
கெம்பீர சத்தமுண்டு வெற்றியின் சத்தமுண்டு -2
ஆபத்து காலத்திலே அனுகூலம் துனணயுமானவர்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே யெகோவா ஷம்மா என்னோடே-2
வழுவாமல் காப்பவரே மாசற்ற சந்நிதானத்தில்
பிதாவின் சமூகத்தில் தைரியமாக
நிற்கச் செய்பவரே முகமுகமாய் பேசுபவரே -2