Mannuyire Kaakath Thannuyir Vidukka

மன்னுயிர்க்காகத் தன்னுயிர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்
2.இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில்
3.வானவர் பணியுஞ் சேனையின் கர்த்தர் ,
மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில்
4.நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில்
5.மெய்யான தேவன் , மெய்யான மனுடன்
மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில்
6.தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,
தேவ கிறிஸ்தையா வந்தார் ,வந்தார் .-பாரில்
7.ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் ,வந்தார் .-பாரில்