manniyum theva manniyume

மன்னியும் தேவ மன்னியுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மன்னியும் தேவ மன்னியுமே
பதரை போல போகிறேன்
நிலையில்லா உலகில் வாழும் என்னை நீர்
தூக்கி எடுத்து நிறுத்துமையா
நீர் செய்த அதிசயம் ஏராளமே
ஆனாலும் அதை நான் மறந்தேனே
மன்னியுமே என்னை மன்னியுமே
இந்த ஒரு விசை என்னையும் மன்னியுமே
ஆபத்து காலத்தில் காத்தீரே
அமிழ்ந்திடாமல் தூக்கினீரே
ஆனாலும் அதை நான் மறந்தேனே நான்
மன்னியுமே என்னை மன்னியுமே
ஒன்றுமில்லாமல் வாழ்ந்தேனே
கிருபையால் என்னை நீர் உயர்த்தினீரே
மன்னியுமே என்னை மன்னியுமே
ஆனாலும் அடை நான் இறந்தேன் நான்
எத்தனை நன்மைகள் எத்தனை மேன்மைகள்
பாவியாம் எனக்கு தந்தவரே
ஆனாலும் அதை நான் மறந்தேனே நான்
மன்னியுமே என்னை மன்னியுமே