mannin mainthar maraisatsi punitha thevasakayam pillai patalkal
தேவசகாயம் பிள்ளை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
மண்ணின் மைந்தர் மறைசாட்சி புனித தேவசகாயம் பிள்ளை பாடல்கள்
பாரத தேசத்தின் முதல் மறைசாட்சியே
தமிழக மாந்தர் போற்றும் நம்பிக்கை சுடரே
எழில்மிகு குமரியின் நட்டாலத்தில் உதித்த அற்புதமே
வடக்கன் குளத்தில் திருமுழுக்கு பெற்று
இறை இயேசுவின் பணி தொடர்ந்தவரே
புலியூர்குறிச்சியில் முட்டிடுச்சு
பாறையில் நீர் பெருகச் செய்த அறுலூற்றே
கிறிஸ்தவம் காத்திட உளம் துணிந்து
ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில்
இன்னுயிரை ஈந்த தியாகத் திருவே
வேதசாட்சியே எங்கள் தேவசகாயம்பிள்ளையே
உம் திருப்புகழ் பாடிட திரண்டு வந்தோமே
நீர் வாழ்க நீர் வாழ்க நீர் வாழ்க வாழ்க
பாடல் 1:
முத்திப்பேறு பெற்ற தூயரே – Muththiperu Pettra Thooyarae
முத்திப்பேறு பெற்ற தூயரே வாழ்க
எம் தேவசகாயம்பிள்ளையே வாழ்க
கரம்பிடித்து காக்கின்ற கருணை ஒளி நீரே
மறைசாட்சியே தூயரே வாழ்க
வாழ்க வாழ்க
இந்த தேசத்தின் மேன்மையை
உமது நாமம் வாழ்க
1.. இறைவார்த்தை வெளிச்சத்திலே
உள்ளம் கனிந்த மான்புறுவே
இயேசுவினை முழுமனதாய் இதயம்
அணிந்த உன்னதமே
அடைந்திடும் துன்பத்திற்கு எல்லாம்
துணையாய் இறை வந்து
நெஞ்சம் துணிந்தவரே நல்
திருமறை தீபமே
ஞானப் பூவின் நல் துணையே நீர்
வாழ்க வாழ்கவே
2. வேண்டுதல் கேட்டு அருள்கின்ற
வல்லமை நிரம்பப் பெற்றவரே
நோய்களை உடைத்து சுகம் அருளும்
அற்புதம் நாளும் செய்பவரே
உம் உயிர் கொடுத்த பலி கண்டு
பாறைகள் பிளந்ததே
நல் வெண்கல மணியின் ஓசையுடன்
உம் மகிமை முழங்கியதே
தெய்வச் சுடரே பரிந்துரையின் நீர்
வாழ்க வாழ்கவே
பாடல் 2:
காற்றாடி மலையின் கதிரோனே – Kaattradi Malaiyin Kathironae
காற்றாடி மலையின் கதிரோனே
என் வாழ்வின் சுடராய் வருவீரே-2
நட்டாலம் மண்ணில் உதித்தவரே
பல நன்மைகள் நிறைவாய் தருவீரே
புதுமைகள் புரியும் புண்ணியரே
இறையாசி வழங்கும் தூயவரே
1.. மாபெரும் பழிகளும் மரண
அவதியும் பணிவுடன் ஏற்றீரே
நோய் பல நீக்கி குறை பல தீர்த்தீர்-2
எமக்கு நீ நிறைவானீர்-3
2.2. மானிடர் யாவரும் ஏற்றீ போற்றிடும்
புனிதராய் வாழ்ந்தீரே
அருள் உரை வழங்கி ஆறுதல் அளித்தீர்-2
எமக்கு நீர் ஒளியானீர்-3
பாடல் 3:
தமிழ் மண்ணில் பூத்த – Tamil Mannil Pootha
தமிழ் மண்ணில் பூத்த வெண்மலரே
முதல்செம்மலரே!
இறை நம்பிக்கை ஏற்றும் ஒளிச்சுடரே தேற்றும் அருட்கடலே!!
வாழிய, வாழியவே !
புனிதரே, தேவசகாயமே!
எங்கள் மண்ணுக்கு வான் தந்த தேன் மழையே!
வாழிய, வாழியவே ! புனிதரே, தேவசகாயமே !!
எங்கள் கண்ணுக்கு உருக்கொண்ட அருட்கொடையே
1.. தன்னையே முழுதாய் கையளித்தார்
களி மண்ணாய் இறைவன் வனைந்தெடுக்க
வேதத்தை நிறைவாய் அறிந்துணர்ந்தார்
இறை வார்த்தையில் வாழ்வினை வடிவமைக்க
மனதின் மாற்றத்தில் மறையின் மாற்றத்தை மகிழ்வுடன் ஏற்றவரோ; எல்லோரும் சமமென
ஏற்றத்தாழ்வினை எதிர்த்திடத் துணிந்தவரோ,
பகிர்ந்திடும் அன்பினில்
பரமனின் ஒளிமுகம் பார்த்திடத் துடித்தவரோ;
இல்லற வாழ்விலும் இயேசுவின் சாட்சியாய்
முத்திரை பதித்தவரோ புனிதரே நெஞ்சினில் நிறைந்தவரோ…
2. நெஞ்சினில் உறுதியாய் நிலைத்திருந்தார்
ஒளிர் பொன்னாய் நெருப்பினில் சுடர்ந்தெழவே;
உயிரையும் பலியாய் உவந்தளித்தார்
இறை இயேசுவின் மறையுடல் வளர்ந்திடவே;
சிலுவை நாதரின்
துயரின் பாதைபோல் எருமையில் ஊர்வலமோ;
திருப்பெயர் சாற்றிட
தாகங்கள் போக்கிட பாறையில் நீர்வருமோ;
பலவித கொடுமைகள்
புனிதரைத் தொட்டதும் இறைபதம் மலர்தருமோ;
செந்நீர் சொரிந்து
இன்னுயிர் துறந்து நம்பிக்கை ஒளி தருமோ
புனிதரின் திடம் எம்மில் நிலைத்திடுமோ….
பாடல் 4 :
இரத்தம் சிந்திய இயேசுவின் சாட்சி – Raththam Sinthiya Yesuvin Saatchi
இரத்தம் சிந்திய இயேசுவின் சாட்சி தேவசகாயம்
என்றவர் இறைவனில் பெற்றார்
புனிதரின் மாட்சி நம்பிக்கை வாழ்விலே
என்றும் நமக்கு உயர் மாதிரி நாளும் நடந்திடுவோம்
நாம் அவர் தடம் பற்றி என்றும் அடைந்திடுவோமே வாழ்வினில் வெற்றி
1. நாஞ்சினில் பிறந்த இல்லற மனிதர்
நேர்மை பண்பால் உயர்ந்த அரசு அலுவலர்
வாழ்வினில் துன்பம் சோதனை கண்டவர்
இறைவன் வார்த்தையின் ஒளியால் அவற்றை வென்றவர்
உண்மையை என்றுமே தொடர்ந்து தேடிய உத்தமர்
அதனை இயேசுவில் கண்டதும் ஆகினார் கிறிஸ்துவர்
அவரை எல்லாருக்கும் சொல்லிய நற்செய்தி தூதுவர்
2. சாதியும் உயர்வை உதறினார் அன்றே
யாருக்கும் சகோதர மனிதராகினார் நன்றே
துன்பம் ஆயிரம் தாங்கிய சீடர்
இயேசுவின் மேல் பற்று இழந்திடா வீரர்
இயேசுவை அறிந்திடும் இணையில் செல்வமே பெற்றிட
அவர் இழக்கவும் துணிந்தார் பதவியும் உயிருமே
என்றும் இலங்குதே அவரில் எழில் உயர் புனிதமே
பாடல் 5 :
நம்பிக்கை அன்பு எதிர்நோக்கு – Nambikkai Anbu Ethirnokku
நம்பிக்கை அன்பு எதிர்நோக்கு தந்து
வழிகாட்டிடும் எங்கள் தேவசகாயமே
உம் பாதம் தேடி ஒன்றாக கூடி
உள்ளங்கள் பாடும் எங்கள் தேவசகாயமே
மறைவழி குமரியின் காவல் நீரானீர்
இறைவழி செல்லும் வாழ்வின் வேரானீர்
1. இயேசுவை முழுதாய் நீர் அறிந்தீர்
நம்பிக்கை விழுதாய் அகம் நுழைந்தீர்
துன்பங்கள் ஏற்று வழிநடந்தீர்
அன்பின் வலிமையில் துயர் கடந்தீர்
நீர் தந்த உண்மை வாழ்வின் நெறி – 2
நெஞ்சங்கள் எதிர்நோக்கி வாழும் இனி
2. அன்பர்கள் அனைவரின் ஆவல் நீர்
துன்புறுவோரின் காவல் நீர்
செய்தொழில் செழித்திட துணை வந்தீர்
நோய்கள் ஒழித்திட வரம் தந்தீர்
மண்மீது இல்லை உம் போல் அன்பு
சொந்தங்கள் என்றானோம் உம்மால் இன்று
பாடல் 6:
முக்கடல் குமரியின் புதல்வனே – Mukkadal kumariyin puthalvanae
முக்கடல் குமரியின் புதல்வனே
முத்திப்பேறு பெற்ற எங்கள் முதல்வனே
எங்கள் மனங்களை ஆண்டு நின்று
இறை அருள்தனை பரிந்துரைத்திடும் தேவசகாயமே
திருமுழுக்கு பெற்றவரே
திருமறையினை ஏற்றவரே
மணக்கோலம் பூண்டவரே
மக்கள் மனங்களை ஆண்டவரே
தேவசகாயமே… தேவசகாயமே… தேவசகாயமே… தேவசகாயமே…
1.. நாஞ்சில் நாட்டவரே நட்டாலம் பிறந்தவரே
மனிதருள் மாணிக்கமே மங்காத அகல்விளக்கே..
அரசவை பணியும் ஆலய பணியும்
அகமாறு ஏற்ற அன்பரே
யோபுவின் வாழ்வினை தளபதியார் சொல்லிட
நற்செய்தி ஏற்ற நல்லவரே
தடைகள் எல்லாம் தகர்த்தெறிந்து
நிந்தை செய்வோரின் சிந்தனை மாற்றி
கிறிஸ்துவின் சீடரானீர் கிறிஸ்தவ வாழ்வுமாநீர்
2.2. மரணத் தண்டனையை அரசனும் அறிவிக்கவே
எருமைமேல் ஊர்வலமாய் எண்ணற்ற ஊர்களிலே..
கொடியவர் கொடுமை கொடுந்துயர்
தணியும் நம்பிக்கை உறுதி கொண்டவரே
எளியவர் வாழ்விலே ஏற்றங்கள் கண்டிட
நல்லவைகள் எடுத்துச் சொன்னவரே
உரிமைக்காக உயிர் துறந்து நீதிக்காக
உண்மை பகிர்ந்து உண்மைக்கு
உயிராநீர் உலகிற்கு ஒளியாநீர்
பாடல் 7:
விசுவாசத்தின் கேடயமே இறையன்பின் – Visuvasathin Kedayamae Iraiyanbin
விசுவாசத்தின் கேடயமே இறை அன்பின் காவியமே
உந்தன் தெய்வீக பாதை தொடர வந்தோம்
எம்மை வழிநடத்தும் உமது அருளால் திடப்படுத்தும்
வாழ்க வாழ்க முனியே தேவசகாயம் பிள்ளையே
1. சிங்கமும் பேயும் நடுங்கி ஓடுமே உமது ஜெபத்தினாலே
உன் சிரமதை அசைத்தால் புதுமைகள் நிகழும் தெய்வ ஆவியாலே மலைகளிலும் மர நிழலினும் இயேசுவை போதிக்க வந்தீரே இறைவார்த்தையிலே பல இதயங்களை புனை மூடு திறந்து வைத்தீரே கிறிஸ்துவத்தின் மகிமையே இறை மாட்சியின் உறைவிடமே
2. இன்னல்கள் எல்லாம் சூழ்ந்த போதிலும் இறைவனில் நிலைதவரே கொடும் சங்கிலிகள் உம்மை நெரித்த போதிலும் நம்பிக்கை கொண்டவரே குடும்பங்களின் நல் மாதிரியாய் திகழ்ந்திடும் எங்கள் குலவிளக்கே எம் கரம் குவித்து உம்மை வேண்டி வந்தோம் எமக்காய் இறைவனை வேண்டுமைய்யா பேறுபெற்ற மறைசாட்சியே எங்கள் ஊரின் காவலரே
பாடல் 8:
தேவசகாயம் பிள்ளை மன்றாட்டு மாலை – Saint Devasagayam Pillai Mantrattu Maalai
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை
தயவாய் கேட்டருளும்
வேத சாட்சிகளின் அரசியான எம் தூய மரியாயே
வேத சாட்சியாம் மறைசாட்சியின்
தேவசகாயம் பிள்ளையே
கிறிஸ்துவ மதத்தை விரும்பி ஏற்ற நல்
துயரமான மறைசாட்சியே
தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்’
பாரதத்தின் முதல் வேத சாட்சியாய்
பெயர் கொண்ட மறைசாட்சியே
அஞ்ஞானத்திலும் மெய்ஞ்ஞானத்திலும்
தேர்ந்து தெளிந்த மறைசாட்சியே
கிறிஸ்தவர் துன்பத்தை தம்மிடம்
தொடர்ந்து ஆவல் கொண்ட மறைசாட்சியே
தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
துவண்டு விடும்போது பொறுமையின் ஆளே
துன்பம் வென்ற மறைசாட்சியே
மலை மர நிழல்களில் சிறைக்கூடங்களில் போதித்த நல் மறைசாட்சியே
கடிந்து கொண்ட பல காவலர்களிடம் கணிவு தந்த மறைசாட்சியே

உள்ளங்கள் எல்லாம் கொண்டாடுகின்ற ஆனந்தமே மறைசாட்சியே இறைவனின் மகிமை விளங்கிட துணிவாய் இறையில் வாழ்ந்த மறைசாட்சியே புதுமைகள் கோடி நாளும் புரிந்து பிரகாசிக்கும் மறைசாட்சியே

சிறை தனில் தவித்து நோய் தனில் ஜெபித்து மீண்ட மறைசாட்சியே துன்பத்தில் ஆர்வமுடன் மறை போதித்த மறைசாட்சியே நெடுந்தொகை கடந்து திருவழிபாட்டில் கலந்துகொண்ட மறைசாட்சியே

தினந்தோறும் திருவிருந்தில் அகமகிழ்ந்த மறைசாட்சியே மனம் குழம்பு கையில் குழுக்களின் நெறி இயல் கேட்டு நடந்த மறைசாட்சியே உறுதியான இறைப்பற்று உடனே உதவும் தூய மறைசாட்சியே

இறைவாக்கினிலே இதயங்களை திறக்கச் செய்த மறைசாட்சியே பதவி இழந்து இறையாட்சி பணிகளில் இதயம் ஏற்ற மறைசாட்சியே கிறிஸ்தவம் மறையில் பலரும் இணைந்திட காரணமே மறைசாட்சியே

அல்லல் அடைவோர் இன் தவித்த வரை அடைக்கலம் காத்த மறைசாட்சியே துன்பத்தில் துவளும் ஏழைகளின் துணையே மறைசாட்சியே ஆவியினால் இறை ஞானம் பெற்று போதித்த நல் மறைசாட்சியே

நீதி கூடத்தில் பொறுமை ஏந்திய பதில் உரைத்த மறைசாட்சியே ஜெபங்களின் ஆளும் நம்பிக்கையாலும் துன்பம் ஏற்ற மறைசாட்சியே ஆராசாக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்த மறைசாட்சியே

எழுமை ஏந்தலே இரக்கத்தின் இடமே கருணைமிகு மறைசாட்சியே குடும்ப வாழ்வின் இல் நல் முன்மாதிரியாய் திகழ்பவரே மறைசாட்சியே மரணத்தின் நின்று இருமுறை மீண்ட அதிசயமே மறைசாட்சியே
திறனாய்வின் படி கிறிஸ்தவ முறையில் தழுவிக்கொண்ட மறைசாட்சியே இளம்வயதில் இறைவனுக்காக துன்பம் ஏற்ற மறைசாட்சியே மகோதர நோயால் தவித்த பெண்ணிற்கு சுகம் அளித்த மறைசாட்சியே
மனைவி மனதையும் மாறிட செய்த இறை பணியே மறைசாட்சியே சிங்கத்தையும் கொடும் பேய்னையும் விரட்டிய மறைசாட்சியே ஆசைகாட்டி மதம் மாற்ற முயன்ற பேயை ஒழித்த மறைசாட்சியே
இரும்புக் கூண்டியிலும் இறை வேண்டுதலை செய்துவந்த மறைசாட்சியே வெள்ளிக்கிழமை மரியாவுக்காக நோன்பிருந்த மறைசாட்சியே சனிக்கிழமை மிக்கேல் தூதருக்கு நோன்பிருந்த மறைசாட்சியே
வேண்டி வந்தோரின் வேதனை தீர்க்கும் வேந்தரே மறைசாட்சியே புலியூர் குறிச்சியில் முட்டிடுச்சு பாறையில் நீர் சுரக்க செய்த மறைசாட்சியே எருமை ஊர்வலமும் எருக்கு மாலையும் விரும்பி ஏற்ற மறைசாட்சியே
விலங்கியல் அடைத்தும் இயேசு கிறிஸ்துவை மருதளிக்காத மறைசாட்சியே எங்கள் அனைவரின் விசுவாசத்திலும் உறுதியான மறைசாட்சியே இறை வார்த்தையிலே வெளிச்சம் பெற்றதால் உயர்ந்தவரே மறைசாட்சியே
உழைக்கும் மக்களின் நல் வலிமையான உன்னதரே மறைசாட்சியே பொறுமையின் தூய கண்ணாடியை எளிமையின் நல்ல ஆவரமே மறைசாட்சியே மறை வாழ்வின் மகிமையை புரிஞ்சு விடுவோர் இன் நன்மையே
கிறிஸ்துவரின் பெரும் தலைவரே அற்புத ஆலமரம் தந்தவரே பாறை மணி ஓசை எழும் விடவே விண்ணக வாசல் அடைந்தவரை இறுதி ஜெபத்திலே கை முட்டி நனையும் கால்முட்டினையும் பதித்தவர்
கலங்கியவரின் கலங்கரை விளக்கு கரம்பிடித்து எம்மை காப்பவரே நன்றியுடன் ஊமை மறவாமல் உன் பணி தொடர வேண்டும் என்று எங்கள் காவலாம் தூயவரே முத்திப்பேறு பெற்ற காட்சியறை
உலகின் பாவங்களைப் போக்குகின்ற இறைவனின் செம்மறியே
mannin mainthar maraisatsi punitha thevasakayam pillai patalkal
paratha thesaththin muthal maraisatsiye
thamizhaka manthar poorrum nampikkai sutare
ezhilmiku kumariyin nattalaththil uthiththa arputhame
vatakkan kulaththil thirumuzhukku perru
irai iyesuvin pani thotarnthavare
puliyoorkurissiyil muttitussu
paraiyil neer perukas seytha aruloorre
kiristhavam kaththita ulam thuninthu
aaralvaymozhi karrati malaiyil
innuyirai eentha thiyakath thiruve
vethasatsiye engkal thevasakayampillaiye
um thiruppukazh patita thirantu vanthoome
neer vazhka neer vazhka neer vazhka vazhka
patal 1:
muththipperu perra thooyare – Muththiperu Pettra Thooyarae
muththipperu perra thooyare vazhka
em thevasakayampillaiye vazhka
karampitiththu kakkinra karunai oli neere
maraisatsiye thooyare vazhka
vazhka vazhka
intha thesaththin menmaiyai
umathu namam vazhka
1.. iraivarththai velissaththile
ullam kanintha manpuruve
iyesuvinai muzhumanathay ithayam
anintha unnathame
atainthitum thunpaththirku ellam
thunaiyay irai vanthu
nenysam thuninthavare nal
thirumarai theepame
nyanap poovin nal thunaiye neer
vazhka vazhkave
2. ventuthal kettu arulkinra
vallamai nirampap perravare
nooykalai utaiththu sukam arulum
arputham nalum seypavare
um uyir kotuththa pali kantu
paraikal pilanthathe
nal venkala maniyin oosaiyutan
um makimai muzhangkiyathe
theyvas sutare parinthuraiyin neer
vazhka vazhkave
patal 2:
karrati malaiyin kathiroone – Kaattradi Malaiyin Kathironae
karrati malaiyin kathiroone
en vazhvin sutaray varuveere-2
nattalam mannil uthiththavare
pala nanmaikal niraivay tharuveere
puthumaikal puriyum punniyare
iraiyasi vazhangkum thooyavare
1.. maperum pazhikalum marana
avathiyum panivutan erreere
nooy pala neekki kurai pala theerththeer-2
emakku nee niraivaneer-3
2.2. manitar yavarum erree poorritum
punitharay vazhntheere
arul urai vazhangki aaruthal aliththeer-2
emakku neer oliyaneer-3
patal 3:
thamizh mannil pooththa – Tamil Mannil Pootha
thamizh mannil pooththa venmalare
muthalsemmalare!
irai nampikkai errum olissutare therrum arutkatale!!
vazhiya, vazhiyave !
punithare, thevasakayame!
engkal mannukku van thantha then mazhaiye!
vazhiya, vazhiyave ! punithare, thevasakayame !!
engkal kannukku urukkonta arutkotaiye
1.. thannaiye muzhuthay kaiyaliththar
kali mannay iraivan vanainthetukka
vethaththai niraivay arinthunarnthar
irai varththaiyil vazhvinai vativamaikka
manathin marraththil maraiyin marraththai makizhvutan erravaroo; elloorum samamena
erraththazhvinai ethirththitath thuninthavaroo,
pakirnthitum anpinil
paramanin olimukam parththitath thutiththavaroo;
illara vazhvilum iyesuvin satsiyay
muththirai pathiththavaroo punithare nenysinil nirainthavaroo…
2. nenysinil uruthiyay nilaiththirunthar
olir ponnay neruppinil sutarnthezhave;
uyiraiyum paliyay uvanthaliththar
irai iyesuvin maraiyutal valarnthitave;
siluvai natharin
thuyarin pathaipool erumaiyil oorvalamoo;
thiruppeyar sarrita
thakangkal pookkita paraiyil neervarumoo;
palavitha kotumaikal
punitharaith thottathum iraipatham malartharumoo;
senneer sorinthu
innuyir thuranthu nampikkai oli tharumoo
punitharin thitam emmil nilaiththitumoo….
patal 4 :
iraththam sinthiya iyesuvin satsi – Raththam Sinthiya Yesuvin Saatchi
iraththam sinthiya iyesuvin satsi thevasakayam
enravar iraivanil perrar
punitharin matsi nampikkai vazhvile
enrum namakku uyar mathiri nalum natanthituvoom
nam avar thatam parri enrum atainthituvoome vazhvinil verri
1. nanysinil pirantha illara manithar
nermai panpal uyarntha arasu aluvalar
vazhvinil thunpam soothanai kantavar
iraivan varththaiyin oliyal avarrai venravar
unmaiyai enrume thotarnthu thetiya uththamar
athanai iyesuvil kantathum aakinar kiristhuvar
avarai ellarukkum solliya narseythi thoothuvar
2. sathiyum uyarvai utharinar anre
yarukkum sakoothara manitharakinar nanre
thunpam aayiram thangkiya seetar
iyesuvin mel parru izhanthita veerar
iyesuvai arinthitum inaiyil selvame perrita
avar izhakkavum thuninthar pathaviyum uyirume
enrum ilangkuthe avaril ezhil uyar punithame
patal 5 :
nampikkai anpu ethirnookku – Nambikkai Anbu Ethirnokku
nampikkai anpu ethirnookku thanthu
vazhikattitum engkal thevasakayame
um patham theti onraka kooti
ullangkal patum engkal thevasakayame
maraivazhi kumariyin kaval neeraneer
iraivazhi sellum vazhvin veraneer
1. iyesuvai muzhuthay neer arintheer
nampikkai vizhuthay akam nuzhaintheer
thunpangkal erru vazhinatantheer
anpin valimaiyil thuyar katantheer
neer thantha unmai vazhvin neri – 2
nenysangkal ethirnookki vazhum ini
2. anparkal anaivarin aaval neer
thunpuruvoorin kaval neer
seythozhil sezhiththita thunai vantheer
nooykal ozhiththita varam thantheer
manmeethu illai um pool anpu
sonthangkal enranoom ummal inru
patal 6:
mukkatal kumariyin puthalvane – Mukkadal kumariyin puthalvanae
mukkatal kumariyin puthalvane
muththipperu perra engkal muthalvane
engkal manangkalai aantu ninru
irai arulthanai parinthuraiththitum thevasakayame
thirumuzhukku perravare
thirumaraiyinai erravare
manakkoolam poontavare
makkal manangkalai aantavare
thevasakayame… thevasakayame… thevasakayame… thevasakayame…
1.. nanysil nattavare nattalam piranthavare
manitharul manikkame mangkatha akalvilakke..
arasavai paniyum aalaya paniyum
akamaru erra anpare
yoopuvin vazhvinai thalapathiyar sollita
narseythi erra nallavare
thataikal ellam thakarththerinthu
ninthai seyvoorin sinthanai marri
kiristhuvin seetaraneer kiristhava vazhvumaneer
2.2. maranath thantanaiyai arasanum arivikkave
erumaimel oorvalamay ennarra oorkalile..
kotiyavar kotumai kotunthuyar
thaniyum nampikkai uruthi kontavare
eliyavar vazhvile errangkal kantita
nallavaikal etuththus sonnavare
urimaikkaka uyir thuranthu neethikkaka
unmai pakirnthu unmaikku
uyiraneer ulakirku oliyaneer
patal 7:
visuvasaththin ketayame iraiyanpin – Visuvasathin Kedayamae Iraiyanbin
visuvasaththin ketayame irai anpin kaviyame
unthan theyveeka pathai thotara vanthoom
emmai vazhinataththum umathu arulal thitappatuththum
vazhka vazhka muniye thevasakayam pillaiye
1. singkamum peyum natungki ootume umathu jepaththinale
un siramathai asaiththal puthumaikal nikazhum theyva aaviyale malaikalilum mara nizhalinum iyesuvai poothikka vantheere iraivarththaiyile pala ithayangkalai punai mootu thiranthu vaiththeere kiristhuvaththin makimaiye irai matsiyin uraivitame
2. innalkal ellam soozhntha poothilum iraivanil nilaithavare kotum sangkilikal ummai neriththa poothilum nampikkai kontavare kutumpangkalin nal mathiriyay thikazhnthitum engkal kulavilakke em karam kuviththu ummai venti vanthoom emakkay iraivanai ventumaiyya peruperra maraisatsiye engkal oorin kavalare
patal 8:
thevasakayam pillai manrattu malai – Saint Devasagayam Pillai Mantrattu Maalai
aantavare irakkamayirum
kiristhuve irakkamayirum
aantavare irakkamayirum
kiristhuve engkal manrattai kettarulum
kiristhuve engkal manrattai
thayavay kettarulum
vetha satsikalin arasiyana em thooya mariyaye
vetha satsiyam maraisatsiyin
thevasakayam pillaiye
kiristhuva mathaththai virumpi erra nal
thuyaramana maraisatsiye
thevasakayam pillaiye engkalukkaka ventikkollum’
parathaththin muthal vetha satsiyay
peyar konta maraisatsiye
anynyanaththilum meynynyanaththilum
thernthu thelintha maraisatsiye
kiristhavar thunpaththai thammitam
thotarnthu aaval konta maraisatsiye
thevasakayam pillaiye engkalukkaka ventikkollum
thuvantu vitumpoothu porumaiyin aale
thunpam venra maraisatsiye
malai mara nizhalkalil siraikkootangkalil poothiththa nal maraisatsiye
katinthu konta pala kavalarkalitam kanivu thantha maraisatsiye

ullangkal ellam kontatukinra aananthame maraisatsiye iraivanin makimai vilangkita thunivay iraiyil vazhntha maraisatsiye puthumaikal kooti nalum purinthu pirakasikkum maraisatsiye

sirai thanil thaviththu nooy thanil jepiththu meenta maraisatsiye thunpaththil aarvamutan marai poothiththa maraisatsiye netunthokai katanthu thiruvazhipattil kalanthukonta maraisatsiye

thinanthoorum thiruvirunthil akamakizhntha maraisatsiye manam kuzhampu kaiyil kuzhukkalin neri iyal kettu natantha maraisatsiye uruthiyana iraipparru utane uthavum thooya maraisatsiye

iraivakkinile ithayangkalai thirakkas seytha maraisatsiye pathavi izhanthu iraiyatsi panikalil ithayam erra maraisatsiye kiristhavam maraiyil palarum inainthita karaname maraisatsiye

allal ataivoor in thaviththa varai ataikkalam kaththa maraisatsiye thunpaththil thuvalum ezhaikalin thunaiye maraisatsiye aaviyinal irai nyanam perru poothiththa nal maraisatsiye

neethi kootaththil porumai enthiya pathil uraiththa maraisatsiye jepangkalin aalum nampikkaiyalum thunpam erra maraisatsiye aarasakku kuzhanthai pakkiyam kitaikkas seytha maraisatsiye

ezhumai enthale irakkaththin itame karunaimiku maraisatsiye kutumpa vazhvin il nal munmathiriyay thikazhpavare maraisatsiye maranaththin ninru irumurai meenta athisayame maraisatsiye
thiranayvin pati kiristhava muraiyil thazhuvikkonta maraisatsiye ilamvayathil iraivanukkaka thunpam erra maraisatsiye makoothara nooyal thaviththa pennirku sukam aliththa maraisatsiye
manaivi manathaiyum marita seytha irai paniye maraisatsiye singkaththaiyum kotum peynaiyum virattiya maraisatsiye aasaikatti matham marra muyanra peyai ozhiththa maraisatsiye
irumpuk koontiyilum irai ventuthalai seythuvantha maraisatsiye vellikkizhamai mariyavukkaka noonpiruntha maraisatsiye sanikkizhamai mikkel thootharukku noonpiruntha maraisatsiye
venti vanthoorin vethanai theerkkum venthare maraisatsiye puliyoor kurissiyil muttitussu paraiyil neer surakka seytha maraisatsiye erumai oorvalamum erukku malaiyum virumpi erra maraisatsiye
vilangkiyal ataiththum iyesu kiristhuvai maruthalikkatha maraisatsiye engkal anaivarin visuvasaththilum uruthiyana maraisatsiye irai varththaiyile velissam perrathal uyarnthavare maraisatsiye
uzhaikkum makkalin nal valimaiyana unnathare maraisatsiye porumaiyin thooya kannatiyai elimaiyin nalla aavarame maraisatsiye marai vazhvin makimaiyai purinysu vituvoor in nanmaiye
kiristhuvarin perum thalaivare arputha aalamaram thanthavare parai mani oosai ezhum vitave vinnaka vasal atainthavarai iruthi jepaththile kai mutti nanaiyum kalmuttinaiyum pathiththavar
kalangkiyavarin kalangkarai vilakku karampitiththu emmai kappavare nanriyutan oomai maravamal un pani thotara ventum enru engkal kavalam thooyavare muththipperu perra katsiyarai
ulakin pavangkalaip pookkukinra iraivanin semmariye