mannil vantha devan ennil

மண்ணில் வந்த தேவன் என்னில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே
என்னில் வந்த தேவன் என்னுள்ளம் வென்றாரே
சர்வ வல்லவர் சாவை வென்றவர்
வல்லமை நிறைந்தவர் வாழ்வை தந்தவர்
இவர் அன்பின் சாட்சி நான்
இவர் எந்தன் மூச்சு தான்
ஜெயத்தின் தேவன் இயேசு
எனக்குள் என்றும் வசிக்கின்றார்.
மகிமை ராஜன் இம்மானுவேலன்
எனக்குள் என்றும் வாழ்கின்றார்
சேற்றினின்று தூக்கி எடுத்து
பாவமெல்லாம் மன்னித்தார்
நோய்களெல்லாம் நீக்கி என்னை
தழும்பினாலே சுகமாக்கினார்
இருள் வாழ்க்கை கசந்த நேசம்,
பொய்யும் புரட்டும் மறைந்ததே
பொய் மாயை உலகில் சாய்ந்திருந்தேன்
மெய் சாட்சியாய் இயேசு நிறுத்தினார்
உலகம் என்னை வெறுத்தபோது
அணைத்த தேவன் அன்பானவர்
உலகம் என்னை சபித்தபோது
அழைத்த தேவன் அற்புதர்