Mannil Vaanam Thavalgintrathu song lyrics

மண்ணில் வானம் தவழ்கின்றது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

மண்ணில் வானம் தவழ்கின்றது
விண்ணின் கீதம் ஒலிக்கின்றது
புதுமை நாளிதுவே – பெரும்
புனித நாளிதுவே
பேதங்கள் மறந்து நாதங்கள் எழுப்பி
அனுபவம் கண்டிடுவோம் – இறை
அனுபவம் கொண்டிடுவோம் – மண்ணில் ….
எத்தனை தினங்கள் காத்திருந்தோம் – இந்த
நித்தியன் வரவை எதிர்நோக்கி
வானின் மகிழ்ச்சியை பூமி ஏற்க
மனித உருவெடுத்தான் புனித உருக்கொடுத்தான்
சிற்பியும் சிற்பங்கள் ஆக்குதல் போல் – இந்த
அற்புதன் புதுமை புரிந்திடுவான்
மீட்பின் மலர்ச்சியை நாமும் காண
புனித பலி கொடுப்போம் புதிய உருவெடுப்போம்