Mannikka Therinthavarae

மன்னிக்கத் தெரிந்தவரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மன்னிக்கத் தெரிந்தவரே
மனதுருக்கம் நிறைந்தவரே
கண்ணுக்கு இமைபோல் எம்மைக்
காக்கின்ற இரட்சகரே
வழி பார்த்து நிற்கின்றோம்
வாருங்க இயேசையா
விழி நோகப் பண்ணாமல்
விரைந்ததே நீர் வாருமையா
இயேசு ராஜா என்னோடு பேசும் ராஜா
பேசும் தெய்வம் நீர் தானே இயேசுராஜா
1.கல்வாரி சிலுவையிலே
கர்த்தாவே இரத்தம் சிந்தி-2
கருணையோடு எம்மைக் காக்க
சிலுவையிலே ஜீவன் தந்தீர் -2
வேண்டும் வரம் கேட்கின்றோம்
மீண்டும் வர பார்க்கின்றோம்
ஆண்டவரே வாருமையா
அன்பு முகம் காட்டுமையா
கூப்பிட்ட குரல் கேட்டு
குறை தீர்க்க வருபவரே
கொடுமையான வியாதியையும்
குணமாக்கும் வைத்தியரே
கண்ணீரின் பாதையிலே
கரம் பிடித்து நடப்பவரே
கண்ணோக்கிப் பாருமையா
கர்த்தாவே வாருமையா