mannathi mannavanam rajathi rajanumam thevathi thevanumam iyesu piranthar

மன்னாதி மன்னவனாம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மன்னாதி மன்னவனாம் ராஜாதி ராஜனுமாம் தேவாதி தேவனுமாம் இயேசு பிறந்தார்
மாளிகை துறந்தவராம் மாமகிமை வெறுத்தவராம் மா மகிழ்ச்சி கொடுக்க வந்த மகிமன் பிறந்தார்
இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் மீது அன்பு வைத்த இம்மானுவேல்- இயேசு
இம்மானுவேல் நம் இம்மானுவேல்
நம்மோடு வாழ வந்த இம்மானுவேல்
1.தாய்மை கோலம் ஏற்றிட்டாரு ஏன் தெரியுமா
ஏழ்மை உருவில் பிறந்திட்டாரு ஏன் புரியுமா (2)
வாழ்விழந்து போன நம்மை வாழ வைக்க வான் மகிமை பெற்று வந்த யேசுவையே கொண்டாடி மகிழ்ந்திடுவோமே
இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் மீது அன்பு வைத்த இம்மானுவேல்- இயேசு
இம்மானுவேல் நம் இம்மானுவேல்
நம்மோடு வாழ வந்த இம்மானுவேல்
2.இரட்சகராய் வந்துட்டாரு ஏன் தெரியுமா
இரட்சிப்பையும் வழங்கிட்டாரு ஏன் புரியுமா (2)
பூவுலகின் பாவம் போக்கும் தெய்வ ஆட்டு குட்டியான புண்ணியரின்
நேசமதை கொண்டாடி மகிழ்ந்திடுவோமே
இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் மீது அன்பு வைத்த இம்மானுவேல்- இயேசு
இம்மானுவேல் நம் இம்மானுவேல்
நம்மோடு வாழ வந்த இம்மானுவேல்