Manidha anbai thediye song lyrics

மனித அன்பை தேடியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மனித அன்பை தேடியே
அலைந்த திரிந்த நாட்கள்
உலக அன்பை தேடியே
அலைந்த திரிந்த நாட்கள்
மனிதர் நெஞ்சில் கீறுகையில்
இது தான் அன்போ என்று கதறினேன்
உள்ளம் முழுவதும் காயங்கள்
கண்ணீர் அனைத்திலும் ஏக்கங்கள்
உண்மை காதலன் இயேசு எனக்குள் வந்தார்
உடைந்த உள்ளதை மீண்டும் உருவாக்கினார்
உண்மை காதலன் நிழலாய் அருகில் வந்தார்
இது தான் உண்மை அன்பு என்று நிஜமாக்கினார் …….
உற்றம் உறவும் வெறுக்கையில்
நேசர் கரங்கள் அனைத்ததே
மனதின் புண்கள் ஆற்றிட
அன்பின் ரத்தம் துடித்ததே
மனிதர் நெஞ்சில் கீறுகையில்
இது தான் அன்போ என்று கதறினேன்
உள்ளம் முழுவதும் காயங்கள்
கண்ணீர் அனைத்திலும் ஏக்கங்கள்
உண்மை காதலன் நிழலாய் அருகில் வந்தார்
இது தான் உண்மை அன்பு என்று நிஜமாக்கினார்
உண்மை காதலன் இயேசு எனக்குள் வந்தார்
உடைந்த உள்ளதை மீண்டும் உருவாக்கினார்