manavattiyum manavalanum

மணவாட்டியும் மணவாளனும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மணவாட்டியும் மணவாளனும்
ஒன்று சேரும் நாள் நெருங்கி விட்டது
எந்தநாள் அது எந்த நாள்
கிறிஸ்து வானிலே தோன்றும்
நல்ல நாள் -2
chorus
மணவாட்டியும் மணவாளனும்
ஒன்று சேரும் நாள் நெருங்கி விட்டது -2
stanza-1
அக்னி ஜுவாலை போன்ற கண்களும்
சிரசிலே வெண் கிரீடமும் -2
அவரை அன்றி வேறே நாமமோ
தேவ வார்த்தை என்பதவர் நாமமே-2 – chorus
stanza-2
சுத்தமும் பிரகாசமுமான
மெல்லிய வெண் வஸ்திரம் -2
அலங்கரித்த மணவாட்டியாய்
மணவாளன் இயேசுவின் கரம் பிடிப்பாய்-2 -chorus
stanza-3
உண்மையும் சத்யமுள்ளவர்
வெண்குதிரைமேல் வருகின்றார் -2
நீதியாய் அவர் நியாயம் செய்ய
யுத்தம் பண்ண வருகின்றார்-2—Chorus