manasoorvai neekkum nizhale (yoona 4:6)

மனசோர்வை நீக்கும் நிழலே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மனசோர்வை நீக்கும் நிழலே (யோனா 4:6)
உம் நிழல் என்மீது படட்டும் (தி.ப.5:15)
எல்லா இருளினை அகற்றும் ஒளியே
உம் ஒளி என்மீது விழட்டும்
பெரும் சுமைகளை எளிதாய் மாற்றும் (மத்11:28-30)
என் உள்ளத்தில் அமைதியை தாரும்
உம் கரத்தினை என் மேல் வையும்
என் செதில்கள் கழன்று போகும் (தி.ப.9:18)
உம் சிறகின் நிழலில் நான் தங்கிவாழ
என் நிழலே நிழலே… நிழலே
1.உம் பெலத்திலே… எம் மதிலையும் தாண்ட (. 18:29)
உம் வலிமையால் உயரப்பறக்க
ஓடினாலும்… களைப்படையாமல் (எசா.40:31)
நடந்தாலும்… சோர்வடையாமல்
என் நிழலே நிழலே… நிழலே
என் உடலினை.. தைக்கும் முள்கள் (2கொ.12)
என்னை குத்தி வருத்தும் கொடுமை
உம் அருளே எனக்கு போதும்
உம் வல்லமை எம்மில் வெளிப்படட்டும்
என் உயிரே உயிரே… உயிரே
3.உம் இறக்கையின் நிழலையே (தி.பா 5:57)
நான் புகலிடமாக கொண்டுள்ளேன்
இடர்கள் நீங்க வேண்டுகிறேன்
உம் உதவியை நாடி நிற்கின்றேன்
என் நிழலே நிழலே…..நிழலே
மனசோர்வை நீக்கும் நிழலே பாடல் வரிகள், Mana Sorvai Neekkum Lyrics