mamari matiyin mathavane

மாமரி மடியின் மாதவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

மாமரி மடியின் மாதவனே
மானுட விடிவின் ஆதவனே
தீவனத் தொட்டியில்
தீவனமே
புனிதம் விளையும்
பூவனமே
உந்தன் பாதம் பணிகின்றோம்
எமையே காணிக்கை ஆக்குகின்றோம்
1.தொழுவில் எழுந்த
பாடல் ஒலி
இடையர்கள் அளித்த காணிக்கை
வானகத் தூதரின்
பேரொலியோ
விண்ணகம் அனுப்பிய காணிக்கை
வெள்ளைப் போளமும்
பொன் தூபம்
ஞானியர் கொடுத்த காணிக்கை
தாழ்மை தவழும்
என் இதயம்
இறைவா நான் தரும் காணிக்கை
2.கர்வம் கொடுக்கும்
காணிக்கையை
இறைவன் என்றும் ஏற்பதில்லை
உவந்தே அளிக்கும்
காணிக்கையின்
அளவை இறைவன் பார்ப்பதில்லை
உந்தன் வழியில்
என் வாழ்வை
அமைப்பேன் இறைவா ஏற்றருள்வாய்
பாவம் இல்லா
இதயத்தைப்
பலியாய் அளிப்பேன் ஏற்றருள்வாய்