malar maname! malar maname! malar maname veesituthe

மலர் மணமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.

மலர் மணமே! மலர் மணமே! மலர் மணமே வீசிடுதே
மங்களமே! மங்களமே! மங்களமே செழித்திடுதே – மலர்மணமே
1.⁠ஜீவநறுமணமே தேவ திருமணமே (2)
ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன்
ஆதிப்பிதா வார்த்தை மூவர் முன்னால் மங்களம்
அன்றுப்போல் இன்றும் என்றும் செழிக்குது மங்களம்
2.⁠⁠தேவதிருச்சபையை தேவ மணவாளியாய் (2)
தேவக்குமாரன் திருமணம் புரிவதுபோல்
ஆவியில் ஜோடிக்கும் ஆதிமெய் அன்பினால்
ஜோதி அன்பின் கயிற்றால் இணைத்தாசீர்தாருமே
3.⁠⁠எபநேசரானவரே இம்மானுவேலவரே (2)
இறுதி வரையிலும் இருப்பதாயுரைத்தீரே
உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிட
திருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட
Tamil Christian Marriage songs, மலர் மணமே பாடல் வரிகள், Malar Manamae lyrics