makimaiyin thevathoothar – Magimaiyin Devathoothar

மகிமையின் தேவதூதர்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மகிமையின் தேவதூதர் – Magimaiyin Devathoothar
1. மகிமையின் தேவதூதர்
மாசிறகை விரித்து
படைப்பில் மகிழ்ந்தார் போல
மேசியா பிறப்பிலும்.
பல்லவி
பாடி ……போற்றி, இயேசு ராஜனை வாழ்த்தி
பாடி ……போற்றி, இயேசு ராஜனை வாழ்த்துங்கள்.
2. புல்வெளியில் ஆட்டிடையார்
கண்ட மாமகிமையை
தேவன் மனுவாய் உதித்து
ஒளியும் வீசுவதால்.
3. நம்பிக்கை பயத்துடனும்
காத்திருப்பார் தூயவர்
அவரும் பிரசன்னமாகி
ஆலயம் நிரப்புவார்.