makanai nan ulakukku anuppukinren

மகனை நான் உலகுக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மகனை நான் உலகுக்கு அனுப்புகின்றேன்
மகிழ்வின் நாள் என கொண்டாடுங்கள்
மீட்டிட அவனை நான் அளிக்கின்றேன்
ஆனந்த மனதுடன் கொண்டாடுங்கள்
காரிருள் நாளின் விடியலவன்
மாபெரும் வாழ்வின் வாசலவன்
காரிருள் நாளின் விடியலவன்
மாபெரும் வாழ்வின் வாசலவன்
பூமியில் பாவம் நுழைந்தவுடன்
மனதில் நானும் முடிவெடுத்தேன்
பாவம் வாழும் பூவுலகை
மாற்றிட அவனை அனுப்புகிறேன்
மகனின் பிறப்பை கொண்டாடுங்கள்
அவன் வருகையின் பொருளை கொண்டாடுங்கள்
மகனின் பிறப்பை கொண்டாடுங்கள்
அவன் வருகையின் பொருளை கொண்டாடுங்கள்
தொழுவில் அவரை தொழுதிடுங்கள்
வாழ்வால் அவரைப் புகழ்ந்திடுங்கள்
காரிருள் நாளின் விடியலவன்
மாபெரும் வாழ்வின் வாசலவன்
காரிருள் நாளின் விடியலவன்
மாபெரும் வாழ்வின் வாசலவன்
வானில் விண்மீன் அனுப்பி வைத்தேன்
ஞானியர் வழியை சரிபார்க்க
தூதரை பூமியில் அனுப்பி வைத்தேன்
வாழ்வின் செய்தியை பரிமாற
புதுமையின் நாதனை கொண்டாடுங்கள்
அவர் பிறந்த இந்நாளில் மன்றாடுங்கள்
பூமியின் நாதனை கொண்டாடுங்கள்
அவர் பிறந்த இந்நாளில் மன்றாடுங்கள்
பாலனின் பாதம் பணிந்திடுங்கள்
பாவங்கள் யாவும் களைந்திடுங்கள்
காரிருள் நாளின் விடியலவன்
மாபெரும் வாழ்வின் வாசலவன்
காரிருள் நாளின் விடியலவன்
மாபெரும் வாழ்வின் வாசலவன்