Magimai Marurooba Malaiyin magimai song lyrics

மகிமை மறுரூப மலையின் மகிமை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மகிமை மறுரூப மலையின் மகிமை
இனிமை தேவனின் சமூகத்தின் இனிமை
நிறைவாக இறங்கட்டுமே
மகிமை நிறைவாக இறங்கட்டுமே
1.சாலொமோன் ஆலயத்தை
அன்று நிரப்பிய உம் மகிமை
உள்ளமாம் ஆலயத்தை நிரப்ப
அழைக்கின்றோம் ஆவலோடு
மோசேயின் ஜெபம் கேட்டு
அன்று காண்பித்த உம் மகிமை
ஏங்கிடும் எங்களையும் சூழ்ந்து
நிரப்பட்டும் இப்பொழுதே
சூரியன் மகிமையிலும்
மா பெரிதான உம் மகிமை
மண்பாண்டம் பொக்கிஷமாய் ஜொலிக்க
ஊற்றிடும் எங்கள் மீது