maekangal naduvae varuvaar

மேகங்கள் நடுவே வருவார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மேகங்கள் நடுவே வருவார்
ராஜாதி ராஜனாய் வருவார்
பாடுங்களேன் வாழ்த்துங்களேன்
இயேசு ராஜாவைப் போற்றுங்களேன்
1. இரட்சகராக வந்தாரே - இப்போ
நியாயாதிபதியாக வருவாரே
மானிடனே நீயும் மனந்திரும்பு
இன்றே உனக்கு இரட்சண்ய நாள்
2. பூமியில் அதிர்ச்சி உண்டாகுதே
கடலின் சீற்றம் பெரிதானதே
இயேசு சொன்ன வார்த்தைகளும்
கடைசி நாட்களில் நிறைவேறுதே
3. இயேசு ராஜனின் வருகையிலே
நீ எங்கே நிற்பாய் சகோதரனே?
நித்திய நித்திய காலமாக
அவருடன் சென்று வாழ்ந்திடலாம்