Lyrics tamil:

உம் சமுகத்தை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Lyrics tamil:
உங்கள் பிரசன்னத்தில் என் தேவையெல்லாம் மறைந்து போகுதே, மறைந்து போகுதே
உங்கள் பிரசன்னத்தில் பயமெல்லாம் ஓடி போகுதே, ஓடி போகுதே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
தேடுவேன் உம் சமுகத்தை
என் தேவையெல்லாம் உம் பாதத்தில் நிம்மதியுடன் இறக்கி வைப்பேன்
நீர் சொன்னதெல்லாம் என் கண்முன் வைத்து
உம் பாத சுவடுகள் பின்தொடர்வேன்
நீர் சொன்னதை செய்யும் வரை காத்திருப்பேன்
மனம் மாறவோ நீர் மனிதனல்ல
நீர் சொன்னதை செய்யும் வரை காத்திருப்பேன்
பொய் சொல்லவோ நீர் மனிதனல்ல
இருளாய் மாறும் வாழ்க்கை தருணம்
உம் மார்வில் நானும் சாய்ந்திடுவேன்
நீர் என் பக்கம் இருக்கும்போது
யாருக்கு நானும் அஞ்சிடுவேன்
நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேனே
என்னை சுற்றி ஆயிரம் பேர் விழுந்தாலும்
எதுவும் என்னை அணுகாதே