leeli malare amaithi nilave thooya valanare

லீலி மலரே அமைதி நிலவே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

லீலி மலரே அமைதி நிலவே தூய வளனாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே
நாளும் இயேசுவின் அருளை வழங்கும் தூய வளனாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே
வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் சூசை தந்தையே
வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் கோவில் புனிதரே
1.உழைக்கும் மக்கள் யாவர்க்கும் பாதுகாவல் நீரன்றோ
படிக்கும் பிள்ளைகள் யாவர்க்கும் உற்ற துணையும் நீரன்றோ
நீதிமானாய் நாங்கள் உம்போல் விளங்கச் செய்திடுவாய்
உழைப்பால் உயரும் தூய மனதை எமக்கு வழங்கிடுவாய்
லீலி மலரே அமைதி நிலவே எங்கள் காவலரே
2.வறுமை, சோர்வு, கவலைகள் எம்மை வாட்டும் பொழுதிலே
ஏங்கும் எம்மைத் தேற்றுமை, கரத்தால் எம்மைத் தாங்குமே
உன்னாலன்றி வேறு யார் எந்தன் பக்கம் நின்றிடுவார்
பாசம் பொங்கும் விழியால் எந்தன் உள்ளம் பார்த்திடுவார்
லீலி மலரே அமைதி நிலவே எங்கள் காவலரே
லீலி மலரே அமைதி நிலவே பாடல் வரிகள், leeli Malarae Amaithi Nilavae Lyrics