Kuyavanin Kaiyil Lyrics

குயவனின் கையில்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

குயவனின் கையில் களிமண்ணை போல
இயேசுவின் கையில் நான்
குயவனின் கையில் களிமண்ணை போல
இயேசுவின் கையில் நான் இருப்பேன்
அவர் ஆயத்தம் செய்து புதுவடிவம் தந்து
பயன்படுத்தும் நல் தெய்வம்
குயவனின் கையில் களிமண்ணை போல
இயேசுவின் கையில் நான்
கழிவுகளை சுத்தப்படுத்தி பக்குவமாய் ஆயத்தம் செய்கிறார்
அவர் சித்தப்படி என்னை வனைகிறார் ஏற்றதோர் வடிவம் கொடுக்கிறார்
நான் கெட்டுப் போனாலும் விட்டுக் கொடுக்காமல் மீண்டும் மீண்டும் உருவாக்குகிறார்.
குயவனின் கையில் குயவனின் கையில் களிமண்ணை போல
இயேசுவின் கையில் நான்
பொன்னை போல புடமிடுகின்றார்; அவர் விரும்பும் குணத்தில் வளர்க்கிறார்
இயேசுவின் சாயலில் உருவாக்கிட பரிசுத்தத்தால் அலங்கரிக்கிறார்
அவர் கிருபையால் என்னை நிறப்புகிறார் மகிமைக்காகவே பயன்படுத்துவார்.
குயவனின் கையில் களிமண்ணை போல
இயேசுவின் கையில் நான்
குயவனின் கையில் களிமண்ணை போல
இயேசுவின் கையில் நான் இருப்பேன்
அவர் ஆயத்தம் செய்து புதுவடிவம் தந்து
பயன்படுத்தும் நல் தெய்வம்
குயவனின் கையில் களிமண்ணை போல
இயேசுவின் கையில் நான்