kuruvapishekanyseytha kolkai – Guruvabisheham Seitha Kolgai

குருவபிஷேகஞ்செய்த கொள்கை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

குருவபிஷேகஞ்செய்த கொள்கை – Guruvabisheham Seitha Kolgai
பல்லவி
குருவபிஷேகஞ்செய்த கொள்கை நயந்தெங்கள்
கூட்டங் கண்பாருஞ் ஸ்வாமி.
அனுபல்லவி
வரமருளும் மேலாம் வானவர் குழாஞ் சூழ
வருபவனே, க்ருபை தருபவனே, வேத
வாசக முறைவரு தாசனை நாடியே
சரணங்கள்
1.திருச்சபையாம் மந்தை மேய்க்க, காணாத -ஆட்டை
ஜீவ நீரோடையிற் சாய்க்க,
உருக்கமுடனே துயர் போக்க, – நொண்டியாட்டை
ஒக்கலித் தனினமாக்க,
‘தருக்குடன் புரியாமற் தாழ்மையுறவே ஞானந்
தங்கிய ஆவி வரந் தினமே பெயும்
இங்கித வேதப்ர சங்கவுரை செயும்
2.அருவி மிகுதியெனச் சாற்றி,-சீஷர் தெரிந்து
ஆவியை யவர்மே லூற்றி,
வருவேனும் முடனெனத் தேற்றி,-வரமளித்த
வண்ணமித் தாசனை யாற்றி,
மருவும் லோகம், பிசாசு, மாமிசம் ஆனாமல்,
வானவனே, குரு வானவனே, பர
ஞான மனோகரனே, நிமலா, இந்தக்
3. புத்தி, பொறுமை,தயை சூடி,-ஜெப தியானம்
பூண்ட சுகிர்த குண நாடி,
உத்தமா வதாரனென நீடி,-மதித்தெங்கெங்கும்
உசிதமா யெவருங் கொண்டாடி,
உத்தம மனைமக்கள் உதவி யூழியஞ்செய்ய
உயிருட லொளி கதிர் எனுமியலாய் நிதம்
நய மிகு சபைதனில் வரு முயர் சிரமெனக்