Kudikka Yaavarum Aazhaippu

பாமாலை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal and Paamalaigal collection.

குடிக்க யாவரும் அழைப்பு – Kudikka Yaavarum Aazhaippu
1.குடிக்க யாவரும்
அழைப்பு பெற்றதான
தெய்வீகத் தயவின்
ஊற்றின்னம் ஓட்டமான
இப்போதென் ஆவியே,
நீ இயேசுவண்டை போ,
வேறு யாராகிலும்
ரட்சிக்கக் கூடுமோ.
2.சீர் கெட்ட உன்னை நீ
ரட்சிப்பது வீணாமே,
நீ பற்ற வேண்டிய
சகாயர் கிறிஸ்து தாமே;
பிதாவை இவரே
ஒப்புரவாக்கினார்,
இவர்நிமித்தமே
பிதா இரங்கினார்.
3.உன் பாவக் குற்றங்கள்
உன்னால் நீங்காத கேடு;
மெய் விசுவாசத்தால்
நீ இயேசு வண்டை சேரு;
உன் சுய புத்தியை
நீ பின்பற்றாதே போ,
வழிகாட்டுபவர்
தெய்வாவி அல்லவோ.
4.அன்புள்ள கர்த்தரே,
அநேகப் பாவத்தாலே
திகைத்திருக்கிற
நான் வேட்டைக் காரராலே
துரத்தப்பட்டதாம்
மான் போல் தவிக்கிறேன்;
இரக்கத்தின் ஊற்றே,
என் தாகந்தருமேன்.
5.மனத் தரித்திரர்
விண்ணப்பத்தைத் தள்ளீரே;
அவர்கள் பாவத்தை
மன்னிக்கிறிறோ மென்றீரே
அடியேன் உமது
நல்லாவி காண்பிக்கும்
வழிக்குள்ளாகிறேன்;
ஆ, என்னை ரட்சியும்.
6.என் தவனத்துக்கு
அச்சீவனின் தண்ணீரை
அளியும், கர்த்தரே;
அத்தால் நான் நல்ல சீரை
அடைந்து புதிதாய்ச்
சிஷ்டிக்கப்படுவேன்
ஆ, இந்தப் பாக்கியம்
என்மேல் வரட்டுமேன்.