kotooramanavanin seerram

கொடூரமானவனின் சீற்றம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கொடூரமானவனின் சீற்றம்
மோதி அடிக்கும் பெருவெள்ளம்
ஏழை என்னை நெருக்குகையில்
நீரே எந்தன் பெலன்
நீரே எந்தன் திடம்
அடைக்கலமும் நிழலுமானீரே
மேகத்தின் நிழல்
வெயிலை தணிப்பதுபோல்
பெலவந்தரின்
ஆரவாரம் தணித்திடுவார்
கர்த்தரே இதை சொன்னார்
சொன்னதை செய்திடுவார்
கரத்தராம் தேவன்
கண்ணீரை துடைத்திடுவார்
கரத்தராம் தேவன் எல்லா
நிந்தையை நீக்கிடுவார்
கர்த்தரே இதை சொன்னார்
சொன்னதை செய்திடுவார்
கரத்தராம் தேவன்
இரட்சித்து காத்திடுவார்
கரத்தராம் தேவன்
களிகூர்ந்து மகிழச்செய்வார்
கர்த்தரே இதை சொன்னார்
சொன்னதை செய்திடுவார்