koora siluvai patukal yarukkaka – intha-2

கோர சிலுவை பாடுகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

கோர சிலுவை பாடுகள் யாருக்காக – இந்த-2
இந்த பாடுகள்யார் செய்த பாவம்-2
தேவ மைந்தன் செய்த தவறா-2
நாம் செய்த பாவத்தால் வந்த பாடுகள்-2
1.இயேசுவின் மார்பில் வடியும் இரத்தத்தை பார்
கோர காட்சியை காண்கின்றாயே-2
கல்வாரியில் காட்சியை நாம் கண்டபின்
நம் கண்களில் கண்ணீர் வரவில்லையே-2
2.சிலுவையின் காட்சியை காண்கின்றாயே
நம் கண்ணில் இச்சைகள் மாறவில்லையே-2
என்று மாறுவாயோ மானிடனே
உன் மனம் உன்னிடம் பேசவில்லையா-2
3.சிந்தனை செய்வாய் சிலுவை எனக்காக
நம் பாவத்தை ஏற்க வந்ததுதான் சிலுவை-2
இயேசுவின் சிலுவை பாடுகள் நமக்காக
இனி பாவம் செய்யாதே மகனே மகளே-2
கோர சிலுவை பாடுகள் பாடல் வரிகள், Kora Siluvai Paadugal lyrics