kooliyaththai kantu kalangkatha thaveethu

கோலியாத்த கண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கோலியாத்தை கண்டு கலங்காத தாவீது
இந்த வார்த்தையைக் கண்டு ஏன் கலங்குகிறாய்
பாவ வழியை விட்டு நீ மனம் திரும்பு
தேவன் மனம் இறங்கி வார்த்தையை நிறுத்திடுவார்-2
1.தேவா கட்டளையை மீறாதே மகனே மகளே
தேவா கட்டளையை மீறினால் அதுவே பாவமே-2
வேத வசனத்தை நன்றாக தியானி
வசனம் உன்னை உயிர்ப்பிக்குமே -2 – கோலியாத்தை
2.ஆறு நாளும் நீ வேலை செய் மகனே மகளே
ஏழாம் நாளும் தேவனின் பரிசுத்த நாளே -2
ஏழாம் நாளும் இஷ்டம் போல போகாதே
மலை எங்கே கடல் எங்கே என்று ஓடாதே -2 – கோலியாத்தை
3.வாதையை தேவன் உன்மேல் அனுப்பினார்
உன் பாவம் வான பரியந்தம் வந்து எட்டியது -2
உன்னை படைத்த உன் தேவனை நீ மறந்தாய்
என்னால் எல்லாம் ஆகும் என்றாய் -2 – கோலியாத்தை
4.உன்னை படைத்த தேவனை நீ வணங்காமல்
உன் மனம் போல் நீ தொழுது கொண்டாய் ஏனோ-2
சாத்தானின் சத்தத்திற்கு கீழ்படிந்து நீ நடந்தாய்
வேதம் போதித்ததை நீ மறந்தாய் -2
5.எகிப்தியர்க்கு தேவன் செய்ததை மறந்தாயோ
ஏன் அந்த வாதை எகிப்துக்கு வந்தது அறியாயோ
இஸ்ரவேலருக்கு வாதை ஒன்றும் வரவில்லை
இஸ்ரவேலர்கள் தேவ ஜனங்கள்