konysa neram konysum mozhiyil – Konja Nearam Konjum Mozhiyil

கொஞ்ச நேரம் கொஞ்சும் மொழியில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

கொஞ்ச நேரம் கொஞ்சும் மொழியில் – Konja Nearam Konjum Mozhiyil
பாடல் வரிகள் – தியான பாடல்
கொஞ்ச நேரம் கொஞ்சும் மொழியில் உன்னைப் பாடிட வா
தஞ்சம் தேடும் எந்தன் உயிரை உன்னில் இணைத்திட வா – 2
உயிரின் உயிரே வா உறவின் நிறைவாய் வா
உலவும் காற்றாய் வா உதய கீற்றாய் வா
1. உனது கரத்தில் முகத்தை பதித்து உலகம் மறந்திடுவேன்
உனது தோளில் மெல்ல சாய்ந்து உறவை பருகிடுவேன் – 2
கலங்கிடும் நேரத்தில் கரத்தில் என்னைத் தாங்கிடு
தயங்கிடும் பொழுதினில் புதிய பாதையில் நடத்திடு
அழகின் நிறைவே வா அருமைத் துணையே வா
இதய நிழலே வா இனிய இசையே வா
2. உனது வரவு பாதை பார்த்து விழிகள் பதித்திருப்பேன்
பெயரைச் சொல்லி அழைக்கும் குரலில்
அன்பை அறிந்திருப்பேன் – 2
மறந்திடும் உறவில்லை மரணம் தொடர்ந்து உடன் வரும்
கைவிடும் கரமில்லை துயரில் நிழலாய் தொடர்ந்திடும்
அழகின் நிறைவே வா அருமைத் துணையே வா
இதய நிழலே வா இனிய இசையே வா