konjum kili pesumae

கொஞ்சும் கிளி பேசுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கொஞ்சும் கிளி பேசுமே
உந்தன் அன்பை கூவும் குயில்
பாடுமே கல்வாரி அன்னை
எத்தனையோ மீறுதல் இயேசுவே ஆறுதல்
விந்தைக் கிறிஸ் இயேசுவே
உம்மைக் காண கண்கள் ஏங்குதே
தந்தையே உம் அன்பைப் பாட
எந்தன் நெஞ்சம் ஏங்குதே
1. வேடன் விரித்த வலைளில் சிக்கி
பரிதவிக்கும் கலை மானப் போல்
சுhத்தானின் பிடியில் இருந்து
என்னை மீட்ட ரட்சகனே
2. சிறகொடிந்த பறவையைப் போல
நம்பிக்கையை இழந்த போது
என்னைக் கரம் பிடித்தவரே
என்றும் தாங்கி நிற்பவரே
3. திசை மாறிய கப்பல் போலே
சீர்குலைந்து தவிக்கும் போது
வழிகாட்டும் கலங்கரை விளக்காய்
வாழ்வு தந்த நாயகனே
4. நாதியில்லை என்று சொல்லி
பாதியில் கைவிட்டது சொந்தம்
ஆதியில் உம் அநாதி சிநேகம்
அதுவே என் நித்திய பந்தம்
ஆண்டவரே நீர் என் சொந்தம்