Konjam Peyarai Kondo Anegam song lyrics

கொஞ்சம் பேரைக் கொண்டோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கொஞ்சம் பேரைக் கொண்டோ
அநேகம் பேரைக் கொண்டோ
இரட்சிப்பது உமக்கு லேசான காரியம்
கொஞ்சம் பேரைக் கொண்டோ
அநேகம் பேரைக் கொண்டோ
விடுவிப்பது உமக்கு லேசான காரியம்
1.வானம் பூமி உண்டாக்கின
சர்வ வல்லமை உள்ள தேவா
சத்துவமும் பெலனும்
வல்லமையும் ஞானமும்
உம் கரத்தில் உள்ளதையா
2.கோலியாத்தை வீழ்த்திட
பெருங் கூட்டம் தேவையில்ல
சின்ன தாவீதைக் கொண்டு
ஒரு கல்லாலே வீழ்த்திய
உம் வல்லமை பெரியதையா
3.எதிரியை முறியடிக்க
பெரிய யுத்தமும் தேவையில்லை
கிதியோனைக் கொண்டு
எக்காளம் ஊதச்செய்து
ஜெயம்கொடுத்த கர்த்தரையா