kolkathaa entalae kolai nadunguthu

கொல்கதா என்றாலே கொலை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கொல்கொதா என்றாலே
கொலை நடுங்குது
மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது
1. எப்படித் தான் மனித கரங்களும் புனித
தலையினை கொட்டத் துணிந்ததோ
அப்படியே அவர் கன்னத்தில் அறைய
எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ
ஐயோ கதறுகின்றாரே
அவர் கன்னங்கள் சிவந்திடவே-2
மரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள்
பெரிதோர் ஆணியால்
குருசில் இணைந்ததே-2
வா என்றழைத்த அன்பின்
கரங்கள் நோகவே
பிரிதிரு ஆணியால் குருசில் இணைந்ததே
அப்பா அங்கே குருசினில் பாவியை
இணைத்தீர் இப்பாவியை இணைத்தீர்
2. நிலமெல்லாம் நின்இரத்தம் கொட்டி விட்டதே
எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே
இடும்பையின் கடலிலே
இறங்கி விட்டீர் இயேசுவே
கொடும்பாவி எந்தனை
தீக்கடலில் மீட்கவே என் பாவம்
மா பெரிது மன்னியும் இயேசு நாதா
புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே
பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே
அடியினால் நின் தேகம் உருகுலைந்ததே
வடிவது மாறி முதல் கோரமானதே
என் அழகே என்னாலே
நின் அழகிழந்தீரே நின் அழகிழந்தீரே