Kodi Arputharae Makkal Kuraigal song lyrics

கோடி அற்புதரே மக்கள் குறைகள்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

கோடி அற்புதரே மக்கள் குறைகள் தீர்ப்பவரே நாடி வருகின்றோம்
உம்பாதம் தேடி வருகின்றோம் – 2
நம்பிக்கைக் கொண்டோம் நலம் பெற வந்தோம்
நன்மைகள் செய்வாயே எம் வாழ்வின் இன்னல்கள் தீர்ப்பாயே – 2
அந்தோணி மாமுனியே கோடி அற்புதம் செய்வாயே
நோய்நொடி தீர்ப்பாயே அன்புத் தாய்போல் காப்பாயே – 2
பதுவை நகரினிலே பார்போற்றப் பிறந்தவரே
இறைவனின் அருளாசீர் இதயத்தில் பெற்றவரே – 2
அலகையை வென்றவரே அற்புதங்கள் செய்பவரே – 2
அன்போடு உம்பாதம் அடைக்கலம் தேடி வந்தோம் – 2 (அந்தோணி )
புதுமைகள் செய்பவரே புண்ணியம் நிறைந்தவரே
கண்ணீர் துடைப்பவரே கவலைகள் தீர்ப்பவரே – 2
தொலைந்து போனதைக் கிடைத்திடச் செய்பவரே – 2
அன்போடு உன்பாதம் அடைக்கலம் தேடி வந்தோம் – 2 (அந்தோணி )
கோடி அற்புதரே மக்கள் குறைகள் தீர்ப்பவரே நாடி வருகின்றோம் – புனித அந்தோணியார் பாடல் Koadi Arputharae Makkal kuraikal lyrics