kirupaikal irakkangkal

கிருபைகள் இரக்கங்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருபைகள் இரக்கங்கள்
தயவும் எனக்கு தந்தீரைய்யா
தாய் போல தேற்றி தனிமையில் தாங்கி
புதுவாழ்வு எனக்கு தந்தீரைய்யா
1.எந்நாளும் என்னை மறவாமல்
சுகம் பெலன் ஜுவனையும் தந்தீரைய்யா
உமக்காகவே நான் உயிர் வாழுவேன்
உம் சமூகம் தேடி நான் தொழுவேன்
2.சத்துருவே நான் விழுந்தாலும்
கர்த்தரின் கரம் பிடித்து எழுந்திடுவேன்
நீதியின் வலக்கரம் தாங்குகையில்
பயப்படேன் நானென்றும் திகைத்திடேனே
கிருபைகள் இரக்கங்கள் பாடல் வரிகள், Kirubaigal Erakkangal lyrics