kirupai karththar kirupai enrenraikkum – kirubai karthar kirubai endrendraikkum

கிருபை கர்த்தர் கிருபை என்றென்றைக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருபை கர்த்தர் கிருபை என்றென்றைக்கும் – kirubai karthar kirubai endrendraikkum
கிருபை கர்த்தர் கிருபை என்றென்றைக்கும் உள்ளது
இரக்கம் அவரது உண்மை தலைமுறைக்கும் உள்ளது
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
அவர் கிருபை நம்மை விட்டு ஒருபோதும் விலகாது
நிற்பதும் நிர்மூலம் ஆகாததும்
உந்தன் மகா கிருபை
கிருபை கிருபை தேவ கிருபையே
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமோ
அவ்வளவு பெரிதாய் அவர் கிருபை நம்மேல் உள்ளது
ஜீவனுள்ள நாளெல்லாம் உம் கிருபை
என்னை தொடர்கின்றதே