kirupai ennai thangkitum

கிருபை என்னை தாங்கிடும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருபை என்னை தாங்கிடும்
கிருபை என்னை தேற்றிடும்
கிருபை என்னை நடத்திடும்
என்றென்றும் -2
என்றும் என்றென்றும்
என்றும் என்றென்றும்
என்றும் என்றென்றுமாய்
பெலவீன நேரத்தில்
பெலன் தந்து காத்தீரே
என் கிருபை உனக்குப்போதும்
என்று சொன்னீரே
நிர்மூலமாகாமல் நிற்பதும் கிருபையே
ராஜாக்கள் மத்தியில் என்னை நடத்தி சென்ற கிருபை
கிருபை இன்னும் தாரும் தேவா வாழ்வின்
எல்லை வரைக்கும்
எல்லை வரைக்கும்
கிருபை இன்னும் வேண்டும் தேவா காணும்
இந்த உலகம் வெல்ல
இந்த உலகம் வெல்ல
என்னை தாங்கும்
என்னை தேற்றும்
என்னை நடத்தும் கிருபையே-2
சோதனை நேரத்தில்
துணையாய் நின்றீரே
என் தலையை உயர்த்திட
புது கிருபையை பொழிந்தீரே
என் வாழ்வின் நாளெல்லாம்
மகிழ்ந்து களி கூர்ந்திட
தினந்தோறும் கிருபையால்
திருப்தியாகினீர்
கிருபை இன்னும் தாரும் தேவா வாழ்வின்
எல்லை வரைக்கும்
எல்லை வரைக்கும்
கிருபை இன்னும் வேண்டும் தேவா காணும்
இந்த உலகம் வெல்ல
இந்த உலகம் வெல்ல
என்னை தாங்கும்
என்னை தேற்றும்
என்னை நடத்தும் கிருபையே -2