kiristhuvin anpaivittu

கிறிஸ்துவின் அன்பைவிட்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிறிஸ்துவின் அன்பைவிட்டு
எதுவுமே இங்கே என்னை பிரிக்கவே முடியாது
உயர்வோ தாழ்வோ
வேறெந்த சிருஷ்டியோ
எதுவுமே பிரிக்காது
இயேசுவை விட்டு பிரிக்கவே முடியாது
உபத்ரவமோ
வியாகுலமோ
துன்பமோ
பசியோ
நாசமோசமோ
கூரான பட்டயமோ
எதுவுமே பிரிக்காது
இயேசுவை விட்டு பிரிக்கவே முடியாது
மரணமோ ஜீவனோ
தேவ தூதரோ
அதிகார வல்லமைகளோ
நிகழ்காரியமோ
வருங்காரியமோ
எதுவுமே பிரிக்காது
இயேசுவை விட்டு பிரிக்கவே முடியாது
இயேசுவே என் நேசரே
எந்நாளுமே நீர் போதுமே
பிரிக்க முடியாது
இயேசுவைவிட்டு பிரிக்க முடியாது”
Romans 8:36-39
கிறிஸ்துவின் அன்பைவிட்டு பாடல் வரிகள், Kiristhuvin Anbai Vittu Lyrics