kiristhu piranthittar

கிறிஸ்து பிறந்திட்டார்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

கிறிஸ்து பிறந்திட்டார்
ஜெயமாய் பிறந்திட்டார்
சந்தோஷமாய் கொண்டாடுவோம்
சங்கீதங்கள் நாம் பாடுவோம்
பெத்லகேமிலே இயேசு பிறந்திட்டார்
ஏழை கோலமாய் தேவபாலன் பிறந்திட்டார்
1. வேத வாக்கியம் நிறைவேறிட
இரட்சகர் பிறந்தாரே
மாட்டு தொழுவத்தில்
கன்னி மரியிடம் இயேசு பிறந்தாரே
2. பாவம் போக்கிட சாபம் நீக்கிட
மீட்பர் பிறந்தாரே
நம்மை மீட்டிட விண்ணில்
சேர்திட மெசியா உதித்தரே
3. அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்
மகிழ்ந்தே பாடுவோம்
பிறப்பின் செய்தியை நாமும் அறிவிப்போம்
பார் எங்கும் அறிந்திடவே
கிறிஸ்து பிறந்திட்டார் பாடல் வரிகள், Kiristhu Piranthittar lyrics