kiristhava vazhvin ethirikal – Kiristhuva vaalvin ethirigal

கிறிஸ்தவ வாழ்வின் எதிரிகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிறிஸ்தவ வாழ்வின் எதிரிகள் – Kiristhuva vaalvin ethirigal
Enemies of the Christian life
உலகம்:
நாம் இந்த உலகத்திற்குரியவர்களல்ல; ஆனால் இந்த உலகத்தில் வாழ்கிறோம். ஆகவே, உலகம் நமக்கு எதிராக இருக்கிறது (யோவான் 15:9). “உலகம்” என்பதின் பொருள் தேவனோடு பகையை உருவாக்கும் ஒரு சூழ்நிலையையும், பரிசுத்த காரியங்களில் வெறுப்பு உண்டாக்கும் நிலைமையும் தான் (யாக். 4:4). “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்.”(1 யோவான் 2:15). “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் இருங்கள்” (ரோமர் 12:2). உலக இன்பங்கள், மோசமான ஆர்ப்பாட்டங்கள், விலையுயர்ந்த, வாசனை திரவியங்கள், உலக சம்பத்து போன்றவைகள் ‘உலகம்’ என்ற பதத்திற்கு கீழ்வரும். (1 2:16).
மாம்சம்:
இது நம் பாவ சுபாவத்தைக் காட்டுகிறது. அதாவது நம் பழைய சுபாவம். புது பிறப்பின் மூலம் நாம் ஒரு புது சுபாவம் பெற்றுள்ளோம். ஆனால் பழைய சுபாவமும் நமக்குள் இருக்கிறது. நாம் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வருவோமானால், நம் மாம்சத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருப்போம்.
சாத்தான் :
தேவனுக்குள்ளது போல, தேவ பிள்ளைகளுக்கும் சாத்தான் சத்துருவாகவே இருக்கிறான் (1 பேதுரு 5:8). தேவனுடைய பிள்ளைகளை தவறாக நடத்துவதற்கு சாத்தான் தன்னை ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வான் (2 கொரி. 11:14). நாம் உறுதியாக நிற்கவும், அவனுக்கு எதிர்த்த நிற்கவும் வேண்டும் (1 பேதுரு 5:9). பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தேவன் நமக்கு கட்டளையிட்டிருக்கிறார் (எபே. 6:16). ஒரு விசுவாசி பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ள வேண்டும் (எபே. 6:11).”சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், தேவனுடைய நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ் திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.” (எபே. 6:14-17).
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready