kazhi kuuru zionae

களிகூரு சீயோனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal and Paamalaigal collection.

1. களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம்
உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
2. ஓசியன்னா! தாவீதின் (மா ஓசன்னா ! தாவீதின்)
மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய
ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின் (மா ஓசன்னா ! தாவீதின்)
மைந்தனே நீர் வாழ்கவே!
3. ஓசியன்னா, ராஜாவே! (மா ஓசன்னா , ராஜாவே!)
வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது
செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே (மா ஓசன்னா , ராஜாவே)
வாழ்க, தெய்வ மைந்தனே!