katum mazhaiyoo

யாவே யாவும் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கடும் மழையோ
பெரும் புயலோ
புகலிடம் நீர்தானையா
பட்டயமோ பழிச்சொல்லோ கேடகம் நீர்தானையா -2
யாவே… (3)
(என்) யாவும் நீரே
(1) தோள் மீது சுமந்திடும் தகப்பன் நீரே
சிறு துரோகமும் செய்யாத தோழன் நீரே- 2
வாய்க்காலை நிரப்பிடும் மழை நீரே
என் வாழ்வின் விடியல் நீரே – 2
யாவே (3)
(என்) யாவும் நீரே
(2) எனக்காக பலியான உறவு நீரே
உயிர்தந்து என்னையும் மீட்டீரே – 2
என் வாழ்வின் ஆதாரம் ஆனவரே
என்னை உயர்த்தினீரே – 2
யாவே (3)
(என்) யாவும் நீரே