kathooram kooppitum saththam

காதோரம் கூப்பிடும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காதோரம் கூப்பிடும் சத்தம்
அது நேசரின் மெல்லிய சத்தம் -2 – காதோரம்
என் பிரியமே நீ ருபவதி
உன்னில் பழுதொன்றும் இல்லை என்றும் -2 -காதோரம்
உன் முக்காட்டின் நடுவினிலே
புறா கண்கள் உன் கண்கள் என்றும் -2 -காதோரம்
திராட்சரசம் பார்க்கிலும் உன் நேசம்
எத்தனை மதுரம் என்றும் -2 – காதோரம்
எங்கேதி ஊர் திராட்சை தோட்டத்தில்
மறுதோன்றி பூங்கொத்தென்றும் -2 – காதோரம்
மாறி காலம் சென்ற தென்றும்
மழையும் பொழிந்து, ஓய்ந்ததென்றும் -2 – காதோரம்
வாடையே எழும்பு என்றும்
தென்றலே வா என்றும் -2 – காதோரம்
நீ அடைக்கப்பட்ட தோட்டம் என்றும்
மறைவு கட்டப்பட்ட நீரூற்று என்றும் -2 – காதோரம்
சாரோனின் ரோஜா என்றும்
பள்ளத்தாக்கில் லீலி புஷ்பம் என்றும் -2 – காதோரம்