Kasantha Maaraa Mathuramaagum

கசந்த மாரா மதுரமாகும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2)
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை (2)
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை
2. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் (2)
3. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார் (2)
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் (2)
4. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் (2)
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் (2)
Biblical Reference
சங்கீதம் 126:5
5 – கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
யாத்திராகமம் 14:13
13 – அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
ஏசாயா 43:2
2 – நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
ஏசாயா 59:19
19 – அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
சங்கீதம் 91:10,11
10 – ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
11 – உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
சங்கீதம் 121:4
4 – இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
ஏசாயா 40:29
29 – சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
ஏசாயா 41:10
10 – நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 41:10
நீ பயப்படாதே,
நான் உன்னுடனே இருக்கிறேன்;
திகையாதே,
நான் உன் தேவன்;
நான் உன்னைப் பலப்படுத்தி
உனக்குச் சகாயம்பண்ணுவேன்;
என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.