karunaiyil kanintha unavithu

கருணையில் கனிந்த

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

கருணையில் கனிந்த உணவிது
அருளினில் விளைந்த உறவிது
இறைவனின் பாச மொழியிது
இதயத்துள் வீசும் ஒளியிது
இதை உண்ணும் எவரும் என்றுமே
பசியை அறிந்திடார்
இதைப் பருகும் எவரும் என்றுமே
தாகம் தெரிந்திடார் (2)
என் உடலிது; இதை உண்ண வாருங்கள்
என் இரத்தம்; இதை வாங்கிப் பருகுங்கள் (2)
உண்ணும் போது இறைவனின் திருஉடலாகிறோம்
உலகம் வாழ நம்மை வழங்கும் அழைப்பைப் பெறுகிறோம் (2)
நற்கருணையாகிறோம்
வாழ்வு தரும் வான் அமுதை உண்ண வாருங்கள் – அது
வாரி வழங்கும் வாழ்வின் சுவையை மண்ணில் சேருங்கள் (2)
புது உடன்படிக்கை நெஞ்சில் கொள்ளுங்கள்
திருவிருந்தினை என் நினைவாய் செய்யுங்கள் (2)
நினைவாகச் செய்து இறைச் சாயல் பெறுகிறோம்
மனிதர் நடுவில் இறைவன் திருநினைவைத் தருகிறோம் (2)
நற்கருணையாகிறோம்
வாழ்வு தரும் வான் அமுதை உண்ண வாருங்கள் – அது
வாரி வழங்கும் வாழ்வின் சுவையை மண்ணில் சேருங்கள் (2)