karththave inthak koovilai – Karthavae Intha Kovilai

கர்த்தாவே இந்தக் கோவிலை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தாவே இந்தக் கோவிலை – Karthavae Intha Kovilai
1.கர்த்தாவே, இந்தக் கோவிலை
கட்டி உம்மாலே முடித்தோம்;
அன்பாக, தேவரீர், இதை
கண்ணோக்கக் கெஞ்சி நிற்கிறோம்.
2.இங்கே உம் தாசர் தாழ்மையாய்
தம் பாவத் தன்மை உணர்ந்தே
மன்றாடும் போது தயவாய்
ஜெபத்தைக் கேளும், தேவனே.
3.உமது தயை, மாட்சிமை
அதில் எப்போதும் விளங்கும்
ஆராதிப்போரின் நெஞ்சத்தை
ஆலயமாக்கியருளும்.
4.பிதா குமாரன் ஆவியே,
இங்கே ப்ரசன்னமாயிரும்,
சீர் பாதம் அண்டும் தாசர்க்கே
நல் ஆசீர்வாதம் அளியும்.