1. karththave ennai nirappum

கர்த்தாவே என்னை நிரப்பும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1. கர்த்தாவே என்னை நிரப்பும்
அனைத்தும் துதியால்
உம் வழிகளை முற்றுமாய் அறிவித்திடவும்
உதட்டால் துதிக்க அல்ல
வெறும் உள்ளத்தாலோ அல்ல
எனதெல்லாம் உம் துதியால்
மாறிட வேண்டுகிறேன்
2. தினமும் பேசும் வார்த்தைகளில்
உம் துதி விளங்கும்
ஐக்கியமாக எப்போதும்
என் நேசருடனே
தேவாலயத்தில் தொனிக்கும்
கூட்டத்தில் மட்டுமல்ல
பூமியில் எந்த பாதையிலும்
அமைதியின் போதும்
3. என் அனைத்தும் உம் துதியால்
நிரம்பி போற்றிட
தம் அன்பை அறிவித்திட
எளியேன் ஆயினும்
நான் செலுத்தும் மகிமையை
கர்த்தாவே ஏற்றுக் கொள்ளும்
இப்பூவில் இந்த ஆரம்பம்
எப்போதும் இனிதே
4. எல்லா பாரமும் பயமும்
பாடலாய் மாறட்டும்
கடினமான வழிகளில்
கீதம் எதிரொலிக்கும்
இராப்பகல் எந்த நேரத்திலும்
பரிசுத்தமாக
வாழ்வின் ஒவ்வொரு அடியும்
தம் ஐக்கியமாகட்டும்